Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கடன் அடைவதற்கான எளிய பரிகாரம்.. விளக்குகிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்..!
ஜோதிடத்திபடி பார்க்கும்போது ஒவ்வொரு ராசிக்கும் கடன்கள் பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகள் உள்ளன.. அந்தவகையில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் கடனில் இருந்து விடுபடலாம் என்று 12 ராசிகளுக்குமான தெய்வங்கள் பற்றியும் பரிகாரம் பற்றியும் பெருகுளம் ராமகிருஷ்ண ஜோதிடர் நமக்கு விளாக்குகிறார்.. வாங்க அது என்னென்ன தெய்வங்கள்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் ..
ருணம், ரோகம், சத்ரு இந்த மூன்றுமே மனிதர்களை பாடாய்படுத்து என ஜோதிடம் கூறுகிறது.. அதிலும் கடன் பிரச்சினை கவலையை ஏற்படுத்தி மனிதர்களை கஷ்டத்தின் உச்சிக்கே கொண்டு போய் சேர்க்கும்.. அப்படி கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்களுக்கு எளிய பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்ன பரிகாரம் செய்தால் கடன்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்?
மேஷம்
புதன்கிழமை தோறும் துளசியால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வருவதன் மூலம் கடன் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது, மிகப்பெரிய பரிகாரம். அத்துடன் புதன் ஹோரையில் கடன்களை அடைப்பது இவர்களுக்கு நன்மையை கொடுக்கும்.
ரிஷபம்
மல்லிகை மலரை மகாலட்சுமிக்கு வழங்கி வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி தேவியின் அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவது நன்மையை கொடுக்கும். தினசரி வெள்ளை ஆடைகளை பயன்படுத்துவதும் மாற்றத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் இவர்கள் கடன்களை திருப்பி கொடுத்தால் மிகுந்த பலனை தரும்..
மிதுனம்
செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலரை முருகனுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.. அத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது குடும்பத்திற்கே நல்ல அனுகூலத்தை கொடுக்கும். கடன்களை அடைக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஜோரைகளில் கடனை கொடுக்க ஆரம்பிக்கத் தொடங்குவது நன்மையை கொடுக்கும்.
கடகம்
குரு ஹோரையில் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் கடக ராசிகளுக்கு நன்மை வந்து சேரும்.. கடன்கள் ஒட்டுமொத்தமாக அடையும்.. வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுக்கும். சிவனை வணங்கி வருவது நன்மையை தரும்..
சிம்மம்
விநாயகர் அகவல் சொல்வதும், அருகம்புல்லை விநாயகருக்கு வழங்கி வழிபடுவதும் பலன்களை கொடுக்கும்.. நன்மையை அள்ளி தரும்.. சூரியன் மற்றும் செவ்வாய் ஹோரையில் கடன்களை அடைக்க தொடங்குவது இவர்களுக்கு நன்மையை கொடுக்கும்.
கன்னி
பைரவர் வழிபாடு செய்து வருவதும் நவக்கிரகங்கள் வழிபாடு செய்து வருவது மிகுந்த மாற்றத்தை கொடுக்க வல்லது.. புதன் ஹோரையில் கடன்களை அடைக்க தொடங்குவதன் மூலம் இவர்கள் வாழ்வில் மாற்றத்தை பார்க்கலாம்..
துலாம்
சுக்கிரன் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க ஆரம்பிப்பது நன்மையை கொடுக்கும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் மகாலட்சுமிக்கு பலன் தரும்.. தாமரை மலரின் மூலமாக வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
கந்த குரு கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவதும் வேல் பூஜை செய்வதும் உங்க கடன்கள் அடைவதற்கான வழிவகுக்கும்.. செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் இவர்கள் கடன்களை அடைக்க தொடங்குவது மிகுந்த நன்மையை கொடுக்கும்..
தனுசு
சுமங்கலி பூஜை செய்து வருவதும், மஞ்சள் பொடியால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும் நீங்க பட்ட கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரம். குரு மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன்கள் அடைவதற்கான நல்ல நிலை உங்களுக்கு உருவாகும்.. அதன் பின்னர் வாழ்க்கையில் கடனே வாங்க மாட்டீர்கள்.. உங்களி நிதி நிலை மேன்மையடையும்..
மகரம்
இவர்கள் குலதெய்வ வழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்து வருவது மிகுந்த நன்மையை கொடுக்கும். வாராஹி தேவிக்கு இவர்கள் பூஜை செய்து வணங்கி வருவது கடன்களை அடைப்பதற்கான நல்ல பரிகாரமாக அமைந்திருக்கும். புதன் மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் இவர்கள் இதை செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
கும்பம்
அம்பாள் வழிபாடு செய்து வருவது மிக நல்ல பரிகாரம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஹோரைகளை இவர்கள் பயன்படுத்துவதன் மூலம் கடன்கள் அடைவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும். தினசரி வீட்டில் ஐந்து முக தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்து வருவதும் நல்ல மாற்றத்தினை தெரும்..
மீனம்
கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையை கொடுக்கும். மீன்களுக்கு உணவு அளிப்பது மற்றும் ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பது போன்றவை இவர்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடிய பரிகாரம். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் இவர்கள் கடன்களை ஆரம்பிக்க ஆரம்பிப்பது நன்மையை தரும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications