For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் முறிந்த பின்பு தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் - ஏன் என்று தெரியுமா...?

By Ashok CR
|

ஒரு காதல்/உறவில் தோல்வி காண்பது என்பது பொதுவான விஷயமே. அப்படி தோற்று விட்டதால் உங்கள் வாழ்க்கை நின்று விடப்போகிறதா என்ன? தோற்று போவதால் ஒன்றும் தவறில்லை. உங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது தான் முக்கியமான விஷயம். அப்போது தான் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

ஆனால் அதே நேரம், நாம் ஏன் நம் உறவில் தோல்வி அடைகிறோம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லதே. நீங்கள் திரும்பி பார்க்கையில், உங்கள் குணத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், துணிந்து அதை செய்திடுங்கள். இதனால் வருங்காலத்தில் உறவுகள் தோல்வி அடைவது தவிர்க்கப்படும்.

வலி, காயம் மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் எல்லாம் ஒரு உறவு முறிந்த பின் ஏற்படக்கூடிய பொதுவான எதிர்வினைகள். ஆனால் சிறிது காலம் கடந்து சென்றால், மீண்டும் சந்தோஷத்தை கொண்டு வருவது நல்லது. ஏன் நம் உறவுகள் தோல்வியில் முடிகிறது? எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதற்கு பின்னணியில் ஒரு வலுவான காரணம் இருக்கும். அதேப்போல், ஒரு உறவு முறிந்த பிறகு, மீண்டும் சந்தோஷ உணர்வை பெறுவதற்கும் சில காரணங்கள் உள்ளது. அவற்றைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிதாக மீண்டும் தொடங்கலாம்

புதிதாக மீண்டும் தொடங்கலாம்

ஒரு புதிய துணையுடன் மறுபடியும் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க பழைய உறவின் முறிவு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சில அனுபவங்கள் இருப்பதால் இந்த முறை குறைவான தவறுகளை மட்டுமே நீங்கள் செய்யலாம் தானே!

தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளலாம்

தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளலாம்

ஆம், நீங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள இதனை ஒரு வாய்ப்பாக கருதிக் கொள்ளவும். உங்களின் வருங்கால உறவில், இத்தவறுகளை மீண்டும் இழைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிய உறவில் நன்றாக ஈடுபடலாம்

புதிய உறவில் நன்றாக ஈடுபடலாம்

பொதுவாக பழைய உறவுகளில் இருந்து அனுபவம் பெற்றவர்கள் வருங்கால உறவுகளில் நன்றாக ஈடுபடுவார்கள் என உறவுகள் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய அதீத கவனம்.

நீங்கள் திடமாவீர்கள்

நீங்கள் திடமாவீர்கள்

கண்டிப்பாக, உறவு முறிவு மற்றும் தனிமையின் வலியை மீண்டு வந்த பின், நீங்கள் இன்னமும் திடமாவீர்கள். இதனால் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை, பல வகையான நபர்களை சமாளிக்கும் திறனைப் பெறுவீர்கள்.

நீங்கள் சிறந்த தேர்வுகளை மேற்கொள்ளலாம்

நீங்கள் சிறந்த தேர்வுகளை மேற்கொள்ளலாம்

ஒரு உறவு முறிந்த பிறகு, நீங்கள் தவறான தேர்வுகள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் பெரியளவில் குறையும். மோசமான அனுபவத்திற்கு பிறகு அடுத்த அடியை மிக கவனமாக எடுத்து வைப்பீர்கள்.

எப்போதும் மெய்மறந்து போக மாட்டீர்கள்

எப்போதும் மெய்மறந்து போக மாட்டீர்கள்

மிக வசீகரமான துணையை நீங்கள் கண்டாலும் கூட, அவர்கள் உங்களை கவர உங்களுக்கு சொர்க்கத்தை காட்டுவதாக ஆசை காட்டினாலும் கூட, நீங்கள் அவ்வளவு சுலபத்தில் அவர்கள் வலையில் விழுந்த விட மாட்டீர்கள்.

மாறுவதற்கு கற்றுக் கொள்வீர்கள்

மாறுவதற்கு கற்றுக் கொள்வீர்கள்

கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. நம்மை சுற்றியுள்ளவர்களிடம் வளையத்தக்க வகையில் நடந்து கொள்ள நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். முறிந்து போன உறவுகள் தான் இந்த பண்புகளை கற்றுத் தரும்.

உயர பறக்கமாட்டீர்கள்

உயர பறக்கமாட்டீர்கள்

சில உறவுகள் தோல்வி அடைவதால் நாம் வானில் பறப்பது குறையத் தொடங்கும். வானத்தில் மிதக்கும் உணர்வு ஆரோக்கியமற்றது. சிறந்த உறவுகளைப் பற்றி கனவு காண்பது யதார்த்தம் அல்ல. அதனால் தரையில் கால் வைத்து நடப்பதே பாதுகாப்பானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Be Happy After A Breakup

Why do we fail in relationships? Well, there could be so many reasons but it is better to be happy about relationship failure and start life afresh.
Story first published: Saturday, August 29, 2015, 14:40 [IST]
Desktop Bottom Promotion