சுண்டைக்காய் வத்தல் குழம்பு

Posted by:
Published: Wednesday, September 12, 2012, 9:08 [IST]
 

சுண்டைக்காய் வத்தல் குழம்பு

தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இப்போது இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பிறகு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு, சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு சற்று கெட்டியானதும், அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி மூடி வைக்கவும்.

இப்போது சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!

Read more about: veg recipe, recipe, சைவம்
English summary

sundakkai vathal kulambu | சுண்டைக்காய் வத்தல் குழம்பு

Make delicious sundakkai vathal kulambu using this simple recipe from awesome cuisine.
Write Comments