For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான... துளசி ப்ரைடு ரைஸ்

By Maha
|

ப்ரைடு ரைஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் துளசி ப்ரைடு ரைஸ். இது வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ப்ரைடு ரைஸ் என்று சொல்லலாம். ஏனெனில் துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த ப்ரைடு ரைஸில் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் சமைத்து சாப்பிடலாம். இப்போது இந்த துளசி ப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
துளசி இலைகள் - 1 கப் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் 4 கப்

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து விட்டு, ஒரு தட்டில் போட்டு குளிரை வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் கேரட், குடைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒவ்வொன்றாக சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, மிளகாய் பேஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து, 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விட்டு, இறுதியில் துளசி இலைகளை போட்டு கிளறி, 5 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான துளசி ப்ரைடு ரைஸ் ரெடி!!!

English summary

Spicy Basil Fried Rice

Basil Fried Rice is one of the healthiest fried rice. So, try out this finger-licking delicious recipe of spicy basil fried
Desktop Bottom Promotion