For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாஹி பன்னீர்: தபா ஸ்டைல் ரெசிபி

By Maha
|

இந்தியாவில் தபா ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானவை. அதிலும் இந்த ஸ்டைல் உணவுகளில் நறுமணம் மற்றும் சுவை மிகவும் கூடுதலாக இருக்கும். மேலும் தபா ஸ்டைல் உணவுகளில் சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே மிகவும் சூப்பராக இருக்கும்.

அந்த வகையில் இப்போது ஒரு எளிமையான தபா ஸ்டைல் ரெசிபிக்களில் சாஹி பன்னீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1/2 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு, உருகியதும் வரிமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அரைத்த தக்காளி மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, முந்திரி பேஸ்ட், ஜாதிக்காய் பொடி, சிவப்பு குடைமிளகாய் பொடி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 2-3 நிமிடம் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சாஹி பன்னீர் ரெடி!!!

English summary

Shahi Paneer: Dhaba Style Recipe

There are many dhaba style recipes that you can try at home too! Dhaba recipes are very popular in India for its amazing taste and aroma. Shahi paneer for example is a delicious recipe which when prepared in the dhaba style can make you want more. So, we decided to give the recipe for preparing dhaba style shahi paneer. Check out...
Desktop Bottom Promotion