For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா

By Maha
|

Potato Cheese Pakora
மாலை வேளையில் சற்று மொறுமொறுப்புடனும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்று எண்ணினால், உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் வைத்து பிரட்டால் போண்டா போன்று செய்து கொடுக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்தது)
சீஸ் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (அரைத்தது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பிரட் - 10 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பௌலில் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் துருவிய சீஸ் மற்றும் பூண்டு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பின்பு பிரட் துண்டுகளின் முனையை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காயந்ததும், அதில் அந்த உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது கெட்சப் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

English summary

Potato Cheese Pakora | உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா

Potato cheese pakoras are small balls that are deep fried. The potato and cheese stuffing in this pakora makes it a filling and delicious snack. Check out the recipe to make potato cheese pakoras.
Story first published: Friday, January 18, 2013, 18:07 [IST]
Desktop Bottom Promotion