For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் கோப்தா குழம்பு

By Maha
|

கோப்தா குழம்பை பலவாறு சமைக்கலாம். ஆனால் அவற்றில் சுரைக்காய் கோப்தா குழம்பு மிகவும் பிரபலமானது. மேலும் அசைவ உணவாளர்களுக்கு இறைச்சியை வைத்தும் கோப்தா குழம்பு செய்யலாம். ஆனால் இவற்றிலேயே பன்னீர் கோப்தா குழம்பு சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் இது பன்னீர் ரெசிபிக்களிலேயே மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் என்பதாலேயே ஆகும்.

இத்தகைய பன்னீர் கோப்தா குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்த்து, வீட்டில் செய்து அசத்துவோமா!!!

Paneer Kofta Curry

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தில் துருவிய பன்னீர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வடைக்கு ஏற்றவாறு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கருஞ்சீரகம் மற்றும் மீதமுள்ள பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி வேகும் வரை மீண்டும் 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து மற்றொரு 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பன்னீர் கோப்தா குழம்பு ரெடி!!! இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

English summary

Paneer Kofta Curry | பன்னீர் கோப்தா குழம்பு

The paneer koftas are first deep fried and then cooked in a kofta curry. The gravy can be made using a very simple Indian curry recipe. The trick lies in making the koftas crisp and delicious. It does not take too long to try this paneer recipe. Your paneer kofta curry can be ready to eat in just half an hour.
Story first published: Thursday, May 2, 2013, 12:56 [IST]
Desktop Bottom Promotion