For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் கட்லெட்

By Maha
|

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மாலை வேளையில், பருவமழையின் போது டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுவது என்றால் சூப்பராக உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. அதில் பன்னீரானது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த ஒரு உணவுப் பொருளாகும்.

அத்தகைய பன்னீரைக் கொண்டும் கட்லெட் செய்யலாம். அந்த பன்னீர் கட்லெட் செய்வது என்பது எளிமையான ஒன்று. அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.

Paneer Cutlet: Monsoon Special Recipe

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 250 கிராம் (துருவியது)
பிரட் துண்டுகள் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பிரட் தூள் - 1 கப்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை 1 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பின் அதிலுள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பன்னீர், பிழிந்து வைத்துள்ள பிரட் துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகு தூள், உப்பு, புதினா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, கட்லெட்டுகளாக தட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் மைதா மாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கட்லெட்டுகளை நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான பன்னீர் கட்லெட் ரெடி!!!

English summary

Paneer Cutlet: Monsoon Special Recipe

Paneer is a favourite among vegetarians and non-vegetarians alike. So, here is a spicy and a mouthwatering paneer cutlet recipe. Try out paneer cutlets at home and enjoy the blissful monsoons.
Story first published: Monday, June 17, 2013, 17:58 [IST]
Desktop Bottom Promotion