For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதினா பன்னீர் புலாவ்

By Maha
|

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புதினாவின் வாசம் பலருக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே எங்கு ஹோட்டலுக்கு சென்றாலும், பலர் அந்த புதினா ஃப்ளேவரில் உள்ள உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அதிலும் தென்னிந்திய உணவுகளில் பல்வேறு ஃப்ளேவர்களில் பல கலவை சாதங்கள் உள்ளன. அவை எலுமிச்சை சாதம், புளி சாதம், பருப்பு சாதம் போன்றவை.

அந்த வகையில் புதினாவைக் கொண்டு ஏன் ஒரு கலவை சாதம் செய்ய முடியாது. நிச்சயம் செய்யலாம். அதிலும் எளிமையான முறையில், புதினாவையும், பன்னீரையும் கொண்டு அருமையாக ஒரு கலவை சாதம் செய்ய முடியும். இது ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த புதினா பன்னீர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

Mint Paneer Pulao: Easy Rice Recipe

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது)
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கழுவிய அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு, சாதமாக வந்த பின் இறக்கி விட வேண்டும்.

பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, சாதத்தை லேசாக குளிர வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 2-3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் புதினாவை கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 2-3 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான புதினா பன்னீர் புலாவ் ரெடி!!!

English summary

Mint Paneer Pulao: Easy Rice Recipe | புதினா பன்னீர் புலாவ்

Have you ever heard of mint-flavoured rice? If the answer is no, then here is a mouthwatering recipe to prepare mint paneer pulao.
Story first published: Tuesday, May 21, 2013, 9:15 [IST]
Desktop Bottom Promotion