Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
மாங்காய் புலாவ்
கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்காயை பலவாறு சாப்பிடலாம். மேலும் மாங்காய் என்றாலே அதை சாப்பிட நா ஊறும். ஆகவே அத்தகைய மாங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சற்று வித்தியாசமாக சாதம் அல்லது புலாவ் போன்று சாப்பிடலாம். பொதுவாக மாங்காய் புலாவ் வட இந்தியாவில் தான் பிரபலமானது.
அத்தகைய மாங்காய் புலாவ் செய்வது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். இப்போது அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப் (நீரில் ஊற வைத்தது)
மாங்காய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
மிளகு - 6
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் துருவிய இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
அடுத்து மாங்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் மாங்காய் வேகும் வரை வைக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், சீரகத் தூள் தூவி, 2 நிமிடம் வதக்க வதக்கவும்.
பிறகு அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அத்துடன் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான மாங்காய் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications