Latest Updates
-
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
சேனைக்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
கல்பாசி - சிறிது
அன்னாசிப்பூ - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய சேனைக்கிழங்கை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், சோம்பு, கசகசா போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, குழம்பு மிளகாய் தூளையும் சேர்த்து கிளற வேண்டும்.
பின்பு அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
குருமாவானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான சேனைக்கிழங்கு குருமா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications