For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடைமிளகாய் ப்ரைடு இட்லி

By Maha
|

இரவில் இட்லி செய்து சாப்பிட்டு, நிறைய இட்லிகள் எஞ்சியிருந்தால், அப்போது அதனை தூக்கிப் போடாமல், அதனை பலவாறு செய்து சாப்பிடுவோம். குறிப்பாக இட்லி உப்புமாவைத் தான் பெரும்பாலான வீடுகளில் செய்வோம். ஆனால் இப்போது அவ்வாறு எஞ்சியிருக்கும் இட்லியை உப்புமா செய்யாமல், அதனை சற்று வித்தியாசமாக, குடைமிளகாய் சேர்த்து ஒரு ப்ரைடு இட்லிகளாக செய்யலாம்.

இது காலையில் எளிதில் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு காலை உணவு. ஆகவே வேலைக்கு செல்வோருக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். சரி, அந்த குடைமிளகாய் ப்ரைடு இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Capsicum Fried Idli
தேவையான பொருட்கள்:

இட்லி - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு இட்லி மற்றும் குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சூப்பரான குடைமிளகாய் ப்ரைடு இட்லி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாற வேண்டும்.

English summary

Capsicum Fried Idli | குடைமிளகாய் ப்ரைடு இட்லி

Capsicum Fried idlis is a recipe that makes use of leftover idli to make a spicy new dish. It is awfully easy to make the capsicum fried idli recipe. You need just 10 minutes and you have breakfast ready on the table.
Story first published: Tuesday, April 16, 2013, 10:35 [IST]
Desktop Bottom Promotion