பெங்காலி ஸ்டைல்: பூசணிக்காய் பொரியல்

Posted by:
Updated: Tuesday, July 30, 2013, 14:17 [IST]
 

மதிய வேளையில் சிலரால் பொரியல் இல்லாமல் சாதம் இறங்காது. அப்போது வேகமாகவும், வித்தியாசமான சுவையிலும் ஒரு பொரியல் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால், அதற்கு பூசணிக்காய் பொரியல் சரியானதாக இருக்கும். ஆனால் அந்த பூசணிக்காய் பொரியலையே பெங்காலி ஸ்டைலில் செய்யலாம். பொதுவாக பெங்காலி ரெசிபிக்கள் மிகவும் ருசியானதாக இருக்கும்.

ஆகவே இப்போது அந்த பெங்காலி ஸ்டைலில் எப்படி பூசணிக்காய் பொரியல் செய்வதென்று பார்ப்போம்.

பெங்காலி ஸ்டைல்: பூசணிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணிக்காய் - 250 கிராம் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
சிவப்பு மிளகாய் - 3-4
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
பான்ச் போரோன் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பான்ச் போரோனுக்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காய விதை - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பான்ச் போரோனுக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1 டீஸ்பூன் பான்ச் போரோன், சிவப்பு மிளகாய் போட்டு, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

அடுத்து துருவிய இஞ்சியை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 6 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து 10 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை நன்கு காய்களை வேக வைத்து, இறக்கி கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சூப்பரான பெங்காலி ஸ்டைல் பூசணிக்காய் பொரியல் ரெடி!!!

Story first published:  Tuesday, July 30, 2013, 12:21 [IST]
English summary

Bengali Style: Pumpkin Poriyal

This Bengali vegetarian recipe can be described in one word- simple! Pumpkin Poriyal can be prepared without much preparation or hassle. All you need is a ripened pumpkin and prepare it with a handful of your regular kitchen ingredients. Here goes the Bengali recipe of Pumpkin Poriyal. It is absolutely worth a try.
Write Comments