For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆலு கோபி புலாவ்

By Maha
|

கலவை சாதம் என்றாலே அனைவருக்கும் குஷி தான். ஏனெனில் இதனை செய்வது மிகவும் எளிதானது. மேலும் கலவை சாதத்தில் புலாவ் என்ற ஒன்றும் உண்டு. இதிலும் பல வெரைட்டிகள் உள்ளன. இவை அனைத்தும் விருப்பத்தைப் பொறுத்ததே. குறிப்பாக இவற்றை காலை அல்லது மதிய வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.

இப்போது அவற்றில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவரை வைத்து சூப்பரான ருசியில் புலாவ் செய்யலாம். அதற்கு ஆலு கோபி புலாவ் என்று பெயர். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

Aloo Gobi Pulao Recipe
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3/4 கப் (தோலுரித்தது)
காலிஃப்ளவர் - 1 கப்
பாசுமதி அரிசி - 3 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 5
பிரியாணி இலை - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து, தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு 3 1/2 கப் தண்ணீரை விட்டு, நன்கு கலந்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆலு கோபி புலாவ் ரெடி!!! இதனை ஏதேனும் விருப்பமான கிரேவியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Aloo Gobi Pulao Recipe | ஆலு கோபி புலாவ்

Aloo gobhi pulao is a complete meal prepared with the tasty basmati rice, including cauliflower florets and potatoes that are combined with rice and cooked together in the pressure cooker. This is the perfect meal for the weekend as it not only makes your cooking easy but also ensures that you have enough time for yourself.
Story first published: Monday, March 11, 2013, 14:38 [IST]
Desktop Bottom Promotion