For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்பாளி இஞ்சி ஜூஸ்

By Maha
|

வருடம் முழுவதும் விலை மலிவில் கிடைக்கக்கூடிய ஒரே பழம் தான் பப்பாளி. இப்படி விலை மலிவில் கிடைப்பதால், இது சத்து நிறைந்தது இல்லை என்று அர்த்தமில்லை. மற்ற பழங்களை விட பப்பாளியில் நன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் இதனை அதிகம் சாப்பிடுவது நல்லது.

இங்கு அந்த பப்பாளியுடன் இஞ்சி சேர்த்து எப்படி ஜூஸ் செய்வது என்று கொடுத்துள்ளோம். உடல் எடையை குறைக்க நினைப்போர் இதனை தினமும் சாப்பிட்டு வாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Papaya Ginger Juice

தேவையான பொருட்கள்:

பப்பாளி பழம் - 1
இஞ்சி - 1 இன்ச்
பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பப்பாளி பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இஞ்சியின் தோலையும் சீவிக் கொள்ள வேண்டும்.

பிறகு மிக்ஸியில் பப்பாளி துண்டுகள், இஞ்சி, தேன், பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

இறுதியில் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்த பரிமாறினால், சூப்பரான பப்பாளி இஞ்சி ஜூஸ் ரெடி!!!

English summary

Papaya Ginger Juice

If you want a healthy juice, then try this papaya ginger juice. Its very easy to prepare and helps to reduce weight loss. 
Story first published: Monday, February 10, 2014, 17:25 [IST]
Desktop Bottom Promotion