For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மட்டன் கீமா சூப்

By Maha
|

டயட்டில் இருப்போர் மதிய வேளையில் உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். அதிலும் ஒரு கப் மட்டன் சூப் குடித்தால் மதிய உணவே உட்கொள்ள அவசியமில்லை.

சரி, உங்களுக்கு மட்டன் கீமா சூப் செய்ய தெரியுமா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள். இங்கு அந்த மட்டன் கீமா சூப்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Mutton Keema Soup

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 100 கிராம் (நன்கு நீரில் கழுவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - டீஸ்பூன்
துவரம் பருப்பு - 50 கிராம் (நன்கு நீரில் கழுவியது)
உடைத்த பாசுமதி அரிசி - 1 டேபிள் ஸ்பூன் (நன்கு நீரில் கழுவியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
புதினா - சிறிது
கொத்தமல்லி - சிறிது
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அதில் துவரம் பருப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டி, பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பிறகு அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கினால், மட்டன் கீமா சூப் ரெடி!!!

English summary

Mutton Keema Soup

Do you know how to prepare mutton keema soup? Here is the recipe.
Story first published: Saturday, November 15, 2014, 13:07 [IST]
Desktop Bottom Promotion