For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிக்குதா? இந்த உணவுகளை கொடுங்க...

By Maha
|

குழந்தைகளுக்கு கஷ்டத்தையும், வலியையும் உண்டாகும் பிரச்சனைகளில் ஒன்று தான் பல் முளைத்தல். பொதுவாக குழந்தைகளுக்கு பத்தாவது மாதத்தில் இருந்து பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இவ்வாறு பற்கள் முளைப்பது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்தது. ஆனால் அவ்வாறு பற்களானது முளைக்க ஆரம்பிக்கும் போது, கடுமையான வலியை ஏற்படுத்தும். அதனால் தான் குழந்தைகள் பற்கள் முளைக்கும் சமயங்களில் கிடைப்பதையெல்லாம் கடிப்பார்கள். அதுமட்டுமின்றி, கடுமையான வலியால் விடாமல் அழுவார்கள். அப்போது தாய்க்கு என்ன செய்வதென்றே தெரியாது.

அதனால் சிலர் பற்கள் முளைக்கும் சமயங்களில் குழந்தைகள் கடிப்பதற்கு, ரப்பர் நிப்புளைக் கொடுப்பார்கள். ஏனெனில் அது வலி தெரியாதவாறு ஒருவித இதத்தைக் கொடுக்கும். ஆனால் அப்படி எதையேனும் கடிப்பதற்கு கொடுப்பதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தரும் சில உணவுப் பொருட்களை கடிக்க கொடுத்தால், வலி குறைவதோடு, குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும்.

ஆகவே பல் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளைக் கொடுக்க வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களை வலியில் இருந்து காப்பாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

பற்கள் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஈறுகளில் ஏற்படும் உறுத்தல்கள், வீக்கங்கள் மற்றும் வலிகளை போக்க, வெள்ளரிக்காயைக் கொடுக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. இதனால் அதனை சாப்பிடும் குழந்தைகளின் வலி மறக்கப்படுவதோடு, அதில் உள்ள இயற்கை இனிப்புகளான சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்றவை நார்ச்சத்துக்களுடன் கிடைத்து, குழந்தைகளுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.

அவகேடோ

அவகேடோ

பற்களை முளைக்க ஆரம்பிப்பதால், கிடைத்ததை கடிக்கும் குழந்தைகளுக்கு அவகேடோவைக் கொடுத்தால், வலி குறைவதோடு, அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

பீச்

பீச்

குழந்தைகளுக்கு ஒரு துண்டு பீச் பழத்தைக் கொடுத்தால், அதில் உள்ள புளிப்புச் சுவையால் அதைக் கடிக்கும் போது குழந்தைகளின் பல நகைச்சுவையான முகத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாமல், இந்த பழத்திலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

கொத்திய சிக்கன்

கொத்திய சிக்கன்

அனைத்து குழந்தைகளுக்கும் சிக்கன் சுவை பிடித்ததாக இருக்கும். எனவே பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது கொத்திய சிக்கனைக் கொடுத்தால், அதை மெல்லும் போது வலியானது குணமாகும்.

பயறுகள்

பயறுகள்

நன்கு வேக வைத்த பயறுகளை, குழந்தைகளின் பற்கள் முளைக்கும் போது கொடுப்பது சிறந்தது. இதனால் வலியில்லாமல் ஈறுகளானது எளிதில் வெட்டப்பட்டு, சீக்கிரம் பற்கள் முளைக்கும்.

கேரட்

கேரட்

நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும் கேரட்டையும், குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் கேரட்டின் சுவை குழந்தைகளுக்கு பிடிப்பதோடு, எளிதில் மெல்லக் கூடியதாகவும் இருக்கும்.

சீஸ்

சீஸ்

குழந்தைகளுக்கு ஒரு துண்டு சீஸை கொடுத்து மெல்ல வைத்தால், சீஸானது ஈறுகளில் உள்ள வலியைக் குறைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Foods For Teething Babies

For every parent, it is hard to see your baby in pain so we have listed eight best healthy foods you can give your baby during this period. These healthy foods for teething babies will also provide a whole lot of nutrients and vitamins which is good for your child's growth.
Story first published: Tuesday, July 30, 2013, 14:58 [IST]
Desktop Bottom Promotion