உலக அரங்கில் தமிழர்களை தலைநிமிர வைத்த தமிழ் பிரபலங்கள்!!

இன்று மட்டும் அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்து தமிழ் திரையுலகை பற்றி பேசினாலும் சில நபர்களை தவிர்க்க முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேஷனில் தொடங்கி, மனோரமா, கமல், ரஜினி, ரஹ்மான் என சிலர் தங்கள் பெயரை ஆழமாக பதித்து வைத்திருக்கிறார்கள்.

பல கஷ்டங்களைக் கடந்து தன் திறமையால் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்கள்!

சிலர் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று கிண்டலடிப்பார்கள். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அவர் அமெரிக்காவில் ஒருநாள் மேயர் பதவி வகித்த சிறப்பு பெற்றவர் என்று. நமது தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலரால் பல தருணங்களில் உலக மேடையில் நாம் தலை நிமிர்தியுள்ளோம்.

பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!

அந்த பொன்னான தருணங்களில் சிலவன பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருநாள் மேயர்

ஒருநாள் மேயர்

1960-ம் ஆண்டு நயாகரா ஃபால்ஸ் நகரின் ஒரு நாள் மேயராக இருந்தார் சிவாஜி. மேலும் கெய்ரோவின் தங்க சாவி இவருக்கு பரிசளிக்கப்பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு இந்த பெருமை பெற்ற ஒரே நபர் சிவாஜி அவர்கள் தான்.

ஜான் எப் கென்னடி அழைப்பு

ஜான் எப் கென்னடி அழைப்பு

இந்தியாவின் கலாச்சார தூதுவராக வர சொல்லி ஜான் எப் கென்னடி நடிகர் திலகத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கலாச்சார நிகழ்ச்சி ஜான் எப் கென்னடிக்கு கீழ் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவின் குடிமகன்

கொலம்பியாவின் குடிமகன்

அமெரிக்க அரசாங்கத்தால் சிவாஜிக்கு கொலம்பியாவின் குடிமகன் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

சர்வதேச விருது

சர்வதேச விருது

சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் சிவாஜி தான். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு ஆசியா-ஆப்ரிக்கா திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட்டது.

செவாலியே விருது

செவாலியே விருது

பிரான்ஸ் நாட்டின் உயரிய தேசிய விருதுகளில் விருதுகளில் ஒன்றான செவாலியே விருது கடந்த 1995-ம் ஆண்டு சிவாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்கார் நாயகன்

ஆஸ்கார் நாயகன்

அதிக முறை ஆஸ்காருக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்கள் கமலுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்

பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பெற்ற கமலின் திரைப்படங்கள்: சாகர், ஸ்வாதி முத்யம், நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம்.

சர்வதேச விருதுகள்

சர்வதேச விருதுகள்

அதிக சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் நடிகரும் கமல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச திரைப்பட விழா கொரியா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, புசோன் (Puchon) சர்வசேத திரைப்பட விழா போன்றவற்றில் கமலின் படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

சர்வதேச விருதுகள்

சர்வதேச விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழா: உத்தம - வில்லன் சிறந்த படம், சிறந்த நடிகர்.

சர்வதேச திரைப்பட விழா கொரியா: விருமாண்டி - சிறந்த இயக்குனர் (Director In Focus).

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா: ஹேராம் - சிறந்த இயக்குனர் (Director In Focus).

புசோன் (Puchon) சர்வசேத திரைப்பட விழா: விருமாண்டி - சிறந்த படம்.

ஹார்வர்ட் பல்கலைகழகம்

ஹார்வர்ட் பல்கலைகழகம்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சிறப்பு பேச்சாளாராக அழைக்ப்பட்ட முதல் தமிழ் நடிகர் கமல் தான்.

கின்னஸ் உலக சாதனை

கின்னஸ் உலக சாதனை

கடந்த 1985-ம் ஆண்டு ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்ததன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் மறைந்த நடிகை மனோரமா அவர்கள். 2015 வரை அவர் நடித்த மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 1500க்கும் மேலானவை என கூறப்படுகிறது.

ஈடு செய்ய முடியாத நடிகை

ஈடு செய்ய முடியாத நடிகை

இந்திய திரையுலகில் இவரது இடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது என்பது தான் உண்மை. நகைச்சுவை மட்டுமின்றி, குணசித்திர வேடங்களிலும் திறமையை வெளிப்படுத்தியவர்.

எல்லா புகழும்

எல்லா புகழும்

ஆஸ்கார் மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று கூறி, தமிழர்களை மட்டுமின்றி, தமிழையும் உலக அரங்கில் சிறக்க வைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கார் விருதே கனவாக இருந்த போது, இரண்டு ஆஸ்கார்களை வென்று வந்து சாதித்தவர்.

பிரிட்டிஷ் விருது

பிரிட்டிஷ் விருது

பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருதுகள் எனப்படும் BAFTA விருதும் பெற்றவர் ரஹ்மான். 127 ஹவர்ஸ் எனும் படத்திற்காக சிறந்த இசைக்கான விருதை வென்றார் ரஹ்மான்.

சர்வதேச விருதுகள்

சர்வதேச விருதுகள்

இது மட்டுமின்றி Broadcast Film Critics Association Awards, Dora Mavor Moore Awards (Canada), Chicago Film Critics Association Awards, Golden Globe Awards, Houston Film Critics Society Awards, Laurence Olivier Awards (United Kingdom), MTV Awards, Satellite Awards (United States), WAFCA Awards, World Soundtrack Awards என பல சர்வதேச விருதுகளை அள்ளி குவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

புகழ்

புகழ்

ஆசியாவிலே ஜாக்கி ஜானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை பெற்றவர். சம்பளம் மட்டுமின்றி, புகழிலும் இந்திய நடிகர்களில் சிறந்து விளங்கியவர் ரஜினிகாந்த். இவரது எளிமையும், சிறந்த பண்பும் தான் இதற்கான காரணமாக விளங்குகிறது.

ஜப்பானில் ரசிகர் மன்றம்

ஜப்பானில் ரசிகர் மன்றம்

இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானிலும் ரசிகர் மன்றம் கொண்டிருந்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை ரஜினிக்கு உள்ளது. 1990-களில் இவர் நடித்த பெரும்பாலான் திரைப்படங்கள் ஜப்பானில் சக்கைப்போடு போட்டன.

ஃபார்முலா BMW ஆசியா

ஃபார்முலா BMW ஆசியா

கடந்த 2002-ம் ஆண்டு ஃபார்முலா மாருதி போட்டிகளில் பங்குபெற்று நான்காம் இடத்தில் முடித்ததன் காரணமாக இவருக்கு ஃபார்முலா BMW ஆசியாவில் பங்கெடுக்க ஸ்பான்சர்கள் கிடைத்தனர். இந்த போட்டியில் இவர் ஏழாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்முலா 2

ஃபார்முலா 2

ஃபார்முலா 2 போட்டிகளில் பங்குபெற்ற ஒரே இந்திய நடிகர் அஜித் குமார் தான். தான் முதன்மை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த நேரத்தில் இடைவேளை எடுத்துக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு ஃபார்முலா 2 பந்தயத்தில் பங்குபெற்று திரும்பினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion