For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகவும் கொடூரமான இராணுவ படைகளை கொண்ட நாடுகள்!!!

|

இராணுவம் மக்களை காப்பதற்காக என்பதை மீறி, மற்ற நாடுகளின் மீது போர்தொடுக்கவும், மற்ற நாடுகளின் வளங்களையும், இயற்கை சூழலை சீர்குலைக்கவும் தான் பெரும்பாலும் இன்று பல நாடுகளில் ஊடுருவி வருகின்றன.

ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எப்படி மேலாண்மை தங்களின் ஊழியர் மீது எப்போதும் ஓர் அச்சுறுத்தும் நிலையை ஏற்படுத்தி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறதோ, அவ்வாறு தான் பல வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் மீதும், வளரும் நாடுகள் ஏழை நாடுகளின் மீதும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை ஆட்டிப்படைக்கிறது.

உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

தேவைக்கு தாண்டிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட நாள் முதலே அடிமைத்தனம் உலகளாவிய வகையில் வேரூன்றி நிலைக்க ஆரம்பித்துவிட்டது. இவையெல்லாம், ஏட்டில் இயற்றப்படாத உலக நியதிகள். அந்த வகையில் உலக அளவில் மிகவும் கொடூரமான போர் தொடுத்த இராணுவ படைகள் கொண்ட நாடுகள் பற்றி இனிக் காண்போம்.....

அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாகிஸ்தான் : 10

பாகிஸ்தான் : 10

ஐந்து லட்சத்திற்கும் மேலான இராணுவ வீரர்கள் கொண்ட மாபெரும் படையை வைத்திருக்கிறது பாகிஸ்தான். 3000 பீரங்கிகள் கொண்டுள்ளது பாகிஸ்தான். இராணுவ வீரர்களுக்கு இணையான அளவு தீவிரவாதிகளும் பதுங்கியிருக்கும் நாடு. பல உலகளாவிய குற்றவாளிகளின் அடைக்கலம் தருமிடமாகவும் திகழ்கிறது பாகிஸ்தான்.

சோமாலியா : 9

சோமாலியா : 9

பல வருடங்களாக உள்நாட்டு போர் நிலவி வரும் நாடு சோமாலியா. அரசாங்கத்திற்கு தெரிந்த மக்கள் மற்றும் போராளிகள் கூட்டங்களை விட அதிகமான எதிர்ப்பு படைகள் கொண்ட நாடாக சோமாலியா திகழ்கிறது என கூறப்படுகிறது.

பிரான்ஸ் : 8

பிரான்ஸ் : 8

தற்காப்பிற்கு மட்டுமே வருடாவருடம் 70 பில்லியன் டாலர்கள் செலவழிக்கிறது பிரான்ஸ். ஐரோப்பியவின் மிகவும் பலம் வாய்ந்த நாடாக கருதப்படுகிறது பிரான்ஸ். உலகளவில், மிக மேம்பட்ட பயிற்சியும், இராணுவ ஆயுதங்களும் கொண்ட நாடு பிரான்ஸ்.

இஸ்ரேல் : 7

இஸ்ரேல் : 7

இஸ்ரேல் சிறிய நாடு. மொத்தமே எட்டு மில்லியன் மக்கள் கொண்ட நாடு தான். ஆனால், பெரும் இராணுவ பலம் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 3,800 பீரங்கிகள் மற்றும் ஆயிரம் மைல்கள் தாண்டி குறிவைத்து தாக்கும் அளவு திறன் கொண்ட விமான படைகளை கொண்டுள்ளது இஸ்ரேல். இதற்கு காரணம் இஸ்ரேலுக்கு நிறைய பகைமை நாடுகள் இருக்கின்றன.

 ரஷ்யா : 6

ரஷ்யா : 6

சோவியத் படையை கலைத்த பிறகு, ரஷ்ய பாதுகாப்பு படை உருவானது. இதில் ஆயூதம் தாங்கிய முப்படைகளோடு சேர்த்து, ஏவுகணை இயக்கவும், வான்வழி தாக்குதல் நடத்தவும், விண்வெளி பாதுகாப்பு என தனியாக மூன்று படைகள் இருக்கிறதாம். ரஷ்யாவின் இராணுவ பட்ஜெட் சுமார் 50 பில்லியன் டாலர்கள்.

பிரிட்டிஷ் : 5

பிரிட்டிஷ் : 5

உலகின் சூப்பர் பவர் நேஷன் பிரிட்டிஷ். ஒவ்வொரு வருடமும் 80 பில்லியன் செலவு செய்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்து உலகில் அதிக இராணுவ வீரர்கள் கொண்ட நாடாக திகழ்கிறது யூ.கே. அணைத்து மேம்பட்ட திறனையும் கொண்டுள்ளது யூ.கே இராணுவம். சமீபத்தில் கூட ஆப்கானிஸ்தானில் மட்டும் தனது இராணுவத்தில் இருந்து பத்தாயிரம் நபர்களை அங்கு நிறுத்தியது யூ.கே. உலகின் எந்த நாடுகளுக்குள்ளும் செல்லும் அதிகாரம் கொண்ட நாடாக திகழ்கிறது யூ. கே இராணுவம்.

நார்த் கொரியா : 4

நார்த் கொரியா : 4

ஏறத்தாழ பத்து லட்சம் இராணுவ வீரர்கள் ஆக்டிவாகவும், 80 லட்சம் இராணுவ வீரர்கள் ரிசர்வ்டிலும் கொண்டுள்ளது நார்த் கொரியா. தன் நாட்டு மக்களையே மிகவும் கடுமையான சட்டதிட்டங்கள்களுக்குள் வைத்து நடத்தி வருகிறது நார்த் கொரியா. தனது நாட்டில் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பினும் கூட, தனது பொருளாதாரத்தில் 50%க்கும் மேல் இராணுவ மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது.

சிரியா : 3

சிரியா : 3

உலகளவில் மிகவும் கொடூரமான, இரக்கமற்ற இராணுவம் கொண்டுள்ளது சிரியா. இரண்டு லட்சம் அப்பாவி இஸ்லாமிய மக்களை இரக்கமற்று கொன்று குவித்த அரக்கத்தனமான செயலை செய்தது சிரியாவின் இராணுவம். தனது பகமை நாடுகளின் மீது தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது சிரியா.

சீனா : 2

சீனா : 2

அமெரிக்காவை பின்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது சீனா. ஆக்டிவாக மட்டுமே 2.5 மில்லியனுக்கு மேலான இராணுவ படையை கொண்டிருக்கிறது சீனா. கடந்த 15 வருடங்களாக தனது இராணுவத்தின் பலத்தை அதிகரித்து வருகிறது சினா.

அமெரிக்கா : 1

அமெரிக்கா : 1

கடந்த பத்து ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயித்து செய்து வருகிறது அமெரிக்கா. சூப்பர் பவர் என்ற பெயரில் எந்த நாடுகளிலும் உள்ளே புகுந்து மங்காத்தா விளையாடி வருகிறது அமெரிக்கா. பெரும்பாலான புதுப்புது இராணுவ ஆயுந்தங்களை கண்டுப்பிடிப்பதே அமெரிக்காவில் தான், பல உலக கடத்தல்காரர்களுக்கும் கூட இங்கிருந்து தான் ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுகிறது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Deadliest Armies In The World

Do you know about the ten deadliest armies in the world? Take a look.
Desktop Bottom Promotion