நவபாஷாணம் என்றால் என்ன? இரகசியங்களும், உண்மை தகவல்களும்!!

இங்கு நவபாஷாணம் என்றால் என்ன என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும்.பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம்.

சிவபெருமானுக்கு நீலகண்டன் என்ற பெயர் வர காரணமான கதை!

இதில் நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடிய தன்மையுடையது. நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நவபாஷாணம்

சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்....

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

 

நவக்கிரக தன்மை

இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும் .

நவக்கிரக சக்தி

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள்

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள்

மூன்றில் இரண்டு சிலைகள் போகர் உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நவக்கிரக தோஷம் கழியும்

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம் என்று கருதப்படுகிறது.

நோய் தீர்க்கும் மருந்து

பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்த நீரை / தீர்த்தம் பருகுவதால் (அ) சாப்பிட்டால் தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do you know What Is Navapaasaanam?

Do you know what is navapaasaanam? read here.
Story first published: Thursday, October 15, 2015, 9:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter