For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த வேலைக்கெல்லாம் ஆம்பளைங்க சரிப்பட்டு வரமாட்டாங்க - சவால்விடும் பெண்கள்!!

|

இனி இந்த வாரம் முழுக்க பெண்களைப் பற்றி எட்டுத்திக்கிலும் புகழ் பாடல்களும், பாராட்டு நிகழ்சிகளும், அருமையும், பெருமையும் திரும்புமிடம் எல்லாம் எதிரொலிக்கும். ஆம்! வரும் மார்ச் 8 உலக பெண்கள் தினம். இந்த தருணத்தில், சில வேலைகள் எல்லாம் செய்ய எங்களை விட்டால் ஆளில்லை, ஆண்கள் அந்த வேலைகளுக்கு எல்லாம் சரிவரமாட்டார்கள் என சவால் விட்டிருக்கின்றனர் பெண்கள். சவால்விட்டது மட்டுமில்லாமல் அதை ஒரு பட்டியலிட்டும் கூறியிருக்கின்றனர்.

என்னதான் உடல் அளவில் ஆண்கள் உறுதியானவர்களாக இருந்தாலும், மனதளவில் சிறு பிள்ளைகள் தான் அவர்கள். அவர்களுக்கு ஒருமுகமாக உழைக்கத் தெரியாது. கோபம் மட்டும் தான் முந்திவந்து நிற்குமே தவிர, அறிவை என்றும் பின்னாடி தான் வைத்திருப்பார்கள். தவறுகள் செய்வது, பின் செய்த தவறை எண்ணி வருந்துவதுமே அவர்களது வேலையாக இருக்கிறது. ஆண்களால் பெண்களின் அளவிற்கு திறமையாகவும், சூழ்நிலை, சமயங்களுக்கு ஏற்றவாறு யோசித்து துரிதமாக பணியாற்றும் திறமையும் இல்லை என பெண் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. சரி, இனி அந்த வேலை எல்லா செய்ய ஆம்பளைங்க சரிவரமாட்டாங்க என பெண்கள் சவால்விட்ட விஷயங்கள் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு

படிப்பு

நமது பத்தாம் வகுத்து மாநில பொது தேர்வின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போதே பெண்கள், ஆண்களை முந்தி விடுகின்றனர். பொதுவாகவே பெண்களுக்கு ஆண்களை விட நினைவாற்றல் அதிகம். அக்கம் பக்கத்து வீட்டு பிரச்சனைகளை எல்லாம் கூட நினைவில் ஒரு எழுத்து பிழையின்றி ஊர் முழுக்க முரசு கொட்டி சொல்லும் குணம் அல்லவா அவர்களுக்கு. அதன் வெளிப்பாடு தான், படிப்பில் தாறுமாறாக முன்னின்று ஆண்களை பார்த்து கேலி செய்கின்றனர்.

சாமார்த்தியம்

சாமார்த்தியம்

சூழ்நிலை சமயங்களுக்கு ஏற்ப தங்களது மனநிலையையும், வேலை செய்யும் முறையும் மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் பெண்கள். சாமார்த்தியமாக செயல்படும் குணம் அவர்களது டி.என்.ஏ'வில் கொஞ்சம் மிகுதியாக அச்சிடப்பட்டிருகிறது. இதன் காரணமாக தான் ஐ.க்யூ. அளவிலும் அவர்களே முன்னிலையில் இருகின்றனர்.

சுத்தம்

சுத்தம்

சுத்தம் சோறுபோடும் என எதை வைத்து சொன்னார்களோ தெரியவில்லை. எந்த இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பெண்கள் தான் நமக்கு சமைத்து சோறு போடுகின்றனர். இந்த விஷயத்தில் நூறு சதவீதம் பின்தங்கி இருகின்றனர் ஆண்கள்!

நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு

நேர்முகத்தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் தான் சிறப்பாக செயல்படுகின்றனர் என பல பன்னாட்டு தொழிநுட்ப நிறுவனங்களின் எச்.ஆர். கள் கூறுகிறார்கள். ஆம் இருக்கலாம், ஆண்களின் மூணு நாள் தாடியும், முழுக்கை சட்டையை முக்கால் கையாக மடித்துவிட்டு செல்லும் செயல்களை கண்டு அவர்கள் கடுப்பாகி இவ்வாறு கூறியிருக்கலாம்.

செக்ஸி

செக்ஸி

ஆண்களை விட பெண்கள் தோற்றத்தில் செக்ஸியானவர்கள் என சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பை வைத்து கூறியிருக்கிறார்கள். "இதுக்கெல்லாம் எதுக்குங்க கணக்கெடுப்பு, நாங்க ஒத்துக்குறோம் பொண்ணுங்க தான் செக்ஸியானவங்க" என்று தானாகவே முன்வந்து ஒப்புக் கொள்கின்றனர் ஆண்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

வாகனம் ஓட்டுவதிலும், சாலை பாதுகாப்பிலும், ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருகின்றனர். இந்தியாவில் நடந்த விபத்து விகிதத்தில் பல மைல் தூறும் முன்னாடி நிற்கின்றனர் ஆண்கள். ஆகவே, பாதுகாப்பில் பெண்களே சிறந்தவர்கள் என கூறுகின்றனர்.

சௌகரியம்

சௌகரியம்

புதிதாக எந்த ஒரு இடத்திற்கு இடமாற்றம் ஆனாலும், அந்த இடத்தை தங்களுக்கு ஏற்றவாறு சௌகரியமாக மாற்றிக் கொள்ள கூடியவர்கள் பெண்கள். பெண்கள் அவளவு சீக்கிரத்தில் மன அழுத்தம் அடையமாட்டார்கள். ஆனால், ஆண்கள் புதிய இடத்தில் தங்களை பொருத்திக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

பெண்கள் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். கடந்த 2007 ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வேலை இழந்தவர்களின் பட்டியலில் ஆண்களே அதிகமாக இருகின்றனர். இதற்கு அவர்களது மந்த நிலை தான் காரணமாக கூறப்படுகிறது என அந்த கணக்கெடுப்பில் கூறியிருக்கின்றனர்.

பட்டதாரி

பட்டதாரி

இன்றைய சூழ்நிலையில் பட்டதார்களின் எண்ணிக்கை விகிதத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகமாக மட்டம் பெறுகின்றனர்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

உணவு பழக்கவழக்கத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதிலும், தின்பண்டங்களை தவிர்ப்பதிலும் கூட பெண்களே முன்னிலையில் இருகின்றனர். ஆண்களை போல பெண்களிடம் தீய பழக்கங்கள் இல்லாதது பெண்களுக்கு இந்த விஷயத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

ஆரோக்கிய உணவுகள் தான் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றும் பெண்களே இந்த விஷயத்திலும் ஆண்களை பின்தள்ளி முன்னே இருக்கின்றனர்.

வாழ்நாள்

வாழ்நாள்

ஆண்களை விட பெண்கள் தான் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர். இங்கிலாந்தில், உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 100 வயதுக்கு மேல் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் 85% பேர் பெண்கள் தான் என அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகம்

நிர்வாகம்

ஆண்களை விட திறம்பட நிர்வாகம் செய்கின்றனர் பெண்கள். இதற்கு சரியான எடுத்துக்காட்டு நம் அனைவரின் அம்மாக்களே!

வரவு/செலவு

வரவு/செலவு

வரவிற்கு ஏற்ற செலவு செய்வதில் கட்டுகோப்பாக இருப்பவர்கள் பெண்கள். ஆண்கள் தேவையற்ற செலவுகளை தான் முதலில் செய்வார்கள். எனவே இது போன்ற காரியங்களில் ஆண்கள், பெண்கள் அளவிற்கு திறம்பட சிறப்பாக செய்ய முடியாது என கூறியிருக்கின்றனர். முடிந்தால் இந்த சவால்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்று காட்டுங்கள் ஆண் சிங்கங்களே! "ஆம்பள சிங்கம் எப்போ வேட்டைக்கு போச்சு??!!!?"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Things Women Do Better Than Men

Do you know there are 14 things women do better than men, read here.
Desktop Bottom Promotion