சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By: John
Subscribe to Boldsky

தமிழகத்தில் இருக்கும் "ஆறில் இருந்து அறுவது" வரை அனைவருமே இவரது ரசிகர்கள் தான். இந்தியாவில் ஸ்டைல் என்றால், அதற்கு இலட்சினை இவர் தான். தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே தந்து சாதனைப் படைத்தவர். ஒவ்வொருப் படத்திலும் இவர் செய்யும் ஸ்டைலும், உடை, அணிகலன்கள் தான் அந்த வருடத்தின் ட்ரென்டாக இருந்திருக்கிறது.

மீண்டும் முதல்வராக போகும் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

பாபாவில் தலைவர் கட்டிய தலப்பாக்கட்டுக் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக ஈர்க்கப்பட்டது. தனது எளிமையின் காரணமாகவே ஏழை எளிய மக்களை கவர்ந்தவர் "சூப்பர்ஸ்டார்" ரஜினி. இவருக்கு உடல்நிலை சரியில்ல என்றதும், தமிழகமே எல்லா கடவுள்களையும் வணங்கிய சம்பவம், யாராலும் எளிதில் மறக்க முடியாது.

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

இனி, சூப்பர்ஸ்டார் ரஜினியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பற்றிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ரசிகர் மீதான அக்கறை

22 ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சென்னையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று ரசிகர்கள் விபத்தின் காரணமாக உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்கு பிறகு நகர பகுதிக்குள் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார் ரஜினி.

அதிக சம்பளம்

ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஆசிய நடிகர் ரஜினிகாந்த் தான். இவரது ஸ்டைலை யாராலும் இவரைப் போலவே செய்ய முடியாது அது மிகவும் கடினம் என்று இந்தி நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார்.

ட்விட்டர்

ரஜினி ட்விட்டரில் இணைந்த முதல் நாளிலேயே, 1.5 லட்சம் பேர் இவரை பின்தொடர ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் இந்திய நடிகரை ட்விட்டரில் இணைந்த முதல் நாளில் இவ்வளவு பேர் பின்தொடர்ந்தனர் என்றால் அது ரஜினி தான்.

முதல் இந்திய நடிகர்

இந்தியாவில், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகையிலான படங்களிலும் நடித்த முதல் மற்றும் ஒரே நடிகர் ரஜினி தான்.

பாடப்புத்தகத்தில்

ரஜினியை பற்றிய வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்திள் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஐ.ஐ.எம்-மில் ஓர் பாட பிரிவில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம், ஆய்வுப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நடிக்காத மொழி

ரஜினி இதுவரை, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும். தனது தாய் மொழியான மாராத்தியில் மட்டும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ரசிகர் கூட்டம்

கடந்த 35 ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரே நடிகர் ரஜினி தான். வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம், இவ்வளவு ஆண்டுகள் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rajinikanth Lesser Known Facts

Do you know about the lesser known facts about Rajinikanth? read here.
Story first published: Friday, May 15, 2015, 14:48 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter