Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்!
2015 பிலிம்பேர் கிளாமர் விருது விழாவிற்கு கிலுகிலுப்பாக வந்த காஜல், இலியானா, ஸ்ருதி...!
சமீபத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு நிறைய பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பொதுவாக இந்திய பெண்கள் சாதாரண நிகழ்ச்சி என்றாலே ஃபுல் மேக்கப்பில் வருவார்கள். அதிலும் விருது விழாவிற்கு என்றால் சொல்லவா வேண்டும். அந்த அளவில் நடிகைகள் பலர் பல ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான உடையில் அட்டகாசமாக வந்திருந்தனர்.
அதில் நடிகை ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், இலியானா, தபு, ஸ்ரீதேவி மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு 2015 ஆம் ஆண்டின் பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழாவிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

அக்ஷரா ஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் கருப்பு நிற பாடிகான் உடையில் டக்கராக வந்திருந்தார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கருப்பு நிற ஒற்றைத் தோள்பட்டை கொண்ட மைக்கேல் கோர்ஸ் கவுன் அணிந்து செக்ஸியான லுக்கில் வந்திருந்தார்.

மனஸ்வி மம்கை
மனஸ்வி நச்சிகேட் மினி உடையில் பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் கருப்பு நிற மின்னும் டீப் கட் கொண்ட உடையில், படு செக்ஸியாக வந்திருந்தார்.

அலியா பட்
நடிகை அலியா பட் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் பால்ரூம் கவுனில் வந்திருந்தார்.

இலியானா
இலியாக சந்தன நிற அமித் அகர்வால் கவுனில் கிலுகிலுப்பாக வந்திருந்தார்.

நர்கீஸ் பக்ரி
நடிகை நர்கீஸ் டீப் நெக் கொண்ட பீச் நிற கவுரி மற்றும் நைனிகா உடையில் வந்திருந்தார்.

கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் கிளாமர் விருது விழாவிற்கு டீப் நெக் கொண்ட ராபர்ட்டோ கவாலி கவுனில் செம கிளாமராக வந்திருந்தார்.

திவ்யா கோஷ்லா
திவ்யா கோஷ்லா உள்ளாடை தெரியுமாறான கிரேசியன் செஹ்லா கவுன் அணிந்து, அமரபள்ளி காதணி மற்றும் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் பிலிம்பேர் கிளாமர் மற்றும் ஸ்டைல் விருது விழாவிற்கு டீப் நெக் கொண்ட கிரிஸ்டி டீ சுன்ஹா கவுனில் கலக்கலாகவும், செக்ஸியாகவும் வந்திருந்தார்.

தபு
நடிகை தபு 40 வயதாகியும், இன்னும் இளமைத் தோற்றத்தில் காணப்படுகிறார். அதிலும் இந்த விருது விழாவிற்கு அவர் அணிந்து வந்த மெட்டாலிக் ப்ளூ நிற கவுரவ் குப்தா கவுன் அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி கருப்பு நிற உடையில், அழகான ஸ்மோக்கி ஐ மேக்கப்பில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications