For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

|

தனது "மூன் வாக்" ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசை பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைகேல் ஜாக்சன். கிங் ஆப் பாப், எம்.ஜே, ஜாக்சன், ஸ்மெல்லி என பல புனைப்பெயர் கொண்டு அவரது ரசிகர்களினால் புகழ்ந்து அழைக்கப்பட்டவர். சிறு வயதிலிருந்தே பாப் இசை பாடல்களை பாட தொடங்கிய மைகேல் ஜாக்சன் அவரது பருவ வயதிலேயே பாப் இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார், 1980-90 களில் இவரை மிஞ்ச ஆளே இல்லாமல் பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்தார் மைகேல் ஜாக்சன். இதன் காரணமாய் தான் இவர் "கிங் ஆப் பாப்" என்று உலக மக்களால் அழைக்கப்பட்டார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

இவ்வளவு அருமை, பெருமைக்கு சொந்தக்காரரான மைகேல் ஜாக்சனின் வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு இனிமையாக அமைந்துவிடவில்லை. அவரது பாடல்களின் மூலம் மகிழ்ந்தவர்களின் அளவு கூட, அவரது வாழ்க்கையில் இனிமை பங்குக்கொள்ளவில்லை என்பது தான் கசப்பான உண்மை. இவரது தந்தையை சிறு வயது முதலே இவருக்கு பிடிக்காது. மற்றும் இவர் மிகவும் விரும்பிய இவரது காதலி மரணமடைந்துவிட்டார். 1990-களில் இவரது மேல் சுமத்தப்பட்ட வன்கொடுமை வழக்கு, முக மாற்று அறுவை சிகிச்சைகள் பல தடவை செய்ததினால் இவருக்கு ஏற்பட்ட சரும பிரச்சனைகள், நோய் போன்றவையினால் இவர் வெளிவருவதே அரிதாகிப் போனது.

டாம் அண்ட் ஜெர்ரியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!!

இன்று வரை பாப் இசை ரசிகர்களினால் விரும்பி கேட்கப்பட்டு வரும் இவரது பாடல்கள் பல உலக சாதனைகளை படைத்திருக்கிறது. இவரது சாதனைகளும், வேதனைகளும் பற்றி அறிந்த உங்களுக்கு, இவரது வினோதமான சில குணாதிசயங்கள் பற்றி தெரியுமா? மைகேல் ஜாக்சனுக்கு தான் ஸ்பைடர் மேனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, இது மட்டும் அல்ல இன்னும் நிறைய இருந்தது, அதை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்....

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்னை போல ரோபோட்

தன்னை போல ரோபோட்

தன்னை போலவே உருவம் கொண்ட ஒரு ரோபோட்டினை வடிவமைத்துக் கொள்ள விரும்பினாராம் மைகேல் ஜாக்சன்

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்

உலகின் முதன்மை காமிக்ஸ் புத்தக நிறுவனமான மார்வெல்'லை வாங்கிவிட இருந்தார் மைகேல் ஜாக்சன். ஏனெனில் அவருக்கு அதில் வரும் ஸ்பைடர் மேனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.

நூற்றிற்கும் மேற்பட்ட பாடல்கள்

நூற்றிற்கும் மேற்பட்ட பாடல்கள்

மைகேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ரகசிய பை ஒன்றில் நூற்றிற்கும் மேற்பட்ட பாடல்கள் அவர் பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவை யாவும் வெளியிடப்படாத பாடல்கள். அவற்றை எப்போது வெளியிடுவார்கள் என அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருகின்றனர்.

2001 இல் உயிர் தப்பிய மைகேல் ஜாக்சன்

2001 இல் உயிர் தப்பிய மைகேல் ஜாக்சன்

உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட விமான தாக்குதல் அன்று (Sep 11th, 2001) மைகேல் ஜாக்சன் ஒரு மீட்டிங்கில் பங்கு பெற இருந்தது. அவர் அன்று செல்ல தாமதம் ஆனதால் உயிர் தப்பித்தார்.

உள்ளாடை ஏலம்

உள்ளாடை ஏலம்

ஒரு ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தினால் ஏலம் விடப்பட்ட ஜாக்சனின் உள்ளாடை ஒரு மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

மைகேல் ஜாக்சனின் டாட்டூ

மைகேல் ஜாக்சனின் டாட்டூ

மைகேல் ஜாக்சன் பல முறை முக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதினால், அவரது முகத்தின் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அவரது இதழும், புருவங்களும் உண்மையானது அல்ல டாட்டூ குத்தியது என்று, அவரது மருத்துவர் அவர் இறந்த பிறகு கூறியுள்ளார்.

வெண் குஷ்டம்

வெண் குஷ்டம்

மைகேல் ஜாக்சனுக்கு வெண் குஷ்டம் நோய் இருந்ததாகவும், அதை மறைப்பதற்காக தனது முகம், மார்பு, கைகளில் மிக கடினமான மேக்கப்களை போட்டுக்கொள்வார் என்றும் அவரது மருத்துவர் கூறியுள்ளார்.

30 வருடம் கழித்து வெளிவந்த பாடல்

30 வருடம் கழித்து வெளிவந்த பாடல்

மைகேல் ஜாக்சனும் அவரது நண்பர் ஃபெர்ரி மெர்குரி என்பவரும் பாடிய ஒரு பாடல் 30 வருடங்கள் கழித்து வெளியானதாம்.

ஜாக்சனுக்கு பிடித்த கார்ட்டூன்

ஜாக்சனுக்கு பிடித்த கார்ட்டூன்

மைகேல் ஜாக்சனுக்கு பின்னோச்சியோ (Pinnochchio) என்னும் கார்ட்டூன் மிகவும் பிடித்த கார்ட்டூனாம்.

கர்ணன் மைகேல் ஜாக்சன்

கர்ணன் மைகேல் ஜாக்சன்

பாப் உலகில் மட்டும் அல்ல, கொடை வழங்குவதிலும் மன்னனாக திகழ்ந்துள்ளார். கின்ன்ஸ் சாதனை புத்தகத்தில், நிறைய அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கி ஆதரவளித்தவர் என்ற சாதனையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவம்

சைவம்

மைகேல் ஜாக்சன் அசைவம் சாப்பிடமாட்டார், சைவம் தான் இவரை பின் தொடர்ந்து இவரது பல லட்ச ரசிகர்களும் சைவமாக மாறியிருகின்றனர்.

புனை பெயர்கள்

புனை பெயர்கள்

கிங் ஆப் பாப், எம்.ஜே., க்லோவேட் ஒன், ஜாக்கோ, வாக்கோ, ஸ்மெல்லி போன்ற புனை பெயர்களை கொண்டவர் மைகேல் ஜாக்சன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Facts About The Legendary King Of Pop Michael Jackson

Do you know 12 facts about the legendary king of pop Michael Jackson? read here.
Story first published: Thursday, March 12, 2015, 15:08 [IST]
Desktop Bottom Promotion