நிம்மதியான தூக்கத்தைப் பெற இந்த பானங்களை குடிச்சு பாருங்க...
Jan 10, 2023
Maha Lakshmi S
இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்கினால் தான் மறுநாள் காலை வேலை நன்றாக நடக்கும். சிலருக்கு என்ன செய்தாலும் இரவில் தூக்கம் சரியாக வராது. அப்படிப்பட்டவர்கள் சில பானங்களை அருந்துவதால் நல்ல தூக்கத்தைப் பெற்றிடலாம்.
தூக்கத்தை மேம்படுத்த உதவும் பானங்கள்
கெமோமைல் டீ
கெமோமில் டீயில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அதன் பண்புகள் மனதை அமைதியாக்கும். இந்த டீ தூக்கமின்மை பிரச்சனையைப் போக்க உதவுதோடு, சிறந்த தூக்கத்தை அளித்திடும்
பால்
பாலில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம், மெலடோனினாக மாறுகிறது. இது தூக்கத்தைப் பெற உதவுவதோடு, மனஅமைதியை பெற உதவும்
பாதாம் பால்
பாதாமில் அதிக அளவு டிரிப்டோபன் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நிம்மதியாக தூங்க உதவும்
செர்ரி ஜூஸ்
செர்ரி ஜூஸ் உடலில் டிரிப்டோபனை அதிகரித்து, தூக்கத்தை மேம்படுத்த உதவிடும். இது தூக்கத்தின் தரத்தையும் அளவையும் அதிகரிக்க செய்யும்
நல்ல தூக்கத்தைப் பெற இரவுநேரத்தில் இந்த பானங்களை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சனையால் தூக்கம் வரவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுகவும்
நகம் கடிப்பது உங்கள் பற்களை மோசமாக பாதிக்குமாம்...