அடிக்கடி நகம் கடிப்பீங்களா? அப்ப உங்க பல்லை பத்திரமாக பாத்துக்கோங்க...
Jan 4, 2023
Maha Lakshmi S
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒருவர் விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். இருப்பினும், இந்த பழக்கம் உங்கள் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்
நகம் கடிப்பதால் பற்களில் ஏற்படும் பாதிப்புகள்
பற்கூச்சம்
நகம் கடிப்பதால் ஏற்படும் முக்கிய பாதிப்பு பற்களின் எனாமல் தேய்வது தான். இது பற்கூச்சத்திற்கு வழிவகுக்கும்
பற்களுக்கிடையே இடைவெளி
தொடர்ச்சியாக கை விரல் நகங்களைக் கடிப்பதன் விளைவாக, உங்கள் பற்களின் அமைப்பே காலப்போக்கில் மாறக்கூடும். இதனால், பற்களுக்கிடையே இடைவெளிகள் அல்லது மாலோக்ளூஷன் ஏற்படலாம்
பற்களில் விரிசல்
நகங்களைக் கடித்தால் உங்கள் பற்களில் விரிசல் மற்றும் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது
ஈறு நோய்
கை விரல் நகங்களை அடிக்கடி கடிக்கும்போது, அவற்றிற்கு இடையே உள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் வாயில் சேர அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஈறு அழற்சி மாதிரியான ஈறு நோய் உருவாகலாம்
ப்ரூக்ஸிசம்
நகம் கடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ப்ரூக்ஸிசம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது பல் எனாமல் அரிப்பு, பல் சிதைவு மற்றும் தாடை வலி போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டுமெனில், நகங்களை வளர விடாமல் அடிக்கடி வெட்டுங்கள் அல்லது கையுறை அணியுங்கள். இதை தடுக்க முடியாவிட்டால் உடனே மருத்துவ நிபுணரை சந்தியுங்கள்