Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்வது உண்மையில் நல்லதா? அப்படி வைச்சுக்கிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
தற்போது பெரும்பாலான தம்பதிகள் நீண்ட நேர அலுவலகப் பணியால் இரவு இரவில் பெரும்பாலும் உடலுறவைத் தவிர்க்கிறார்கள். அற்புதமான உடலுறவை விட ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. ஒருவேளை அவர்கள் முயற்சித்தாலும் அந்த உடலுறவு அனுபவம் மந்தமாகவும், ஆர்வமற்றதாகவும் இருக்கும்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு, தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவதையே சலிப்பாக உணர்வார்கள். இந்த பிரச்சினையை சரிசெய்ய, தம்பதிகளுக்கு காலை நேர செக்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும்,

ஏனெனில் தம்பதிகள் காலை நேரத்தில் புத்துணர்ச்சியாகவும், உணர்வுகள் நிறைந்தும் காணப்படுவார்கள். காலை நேரத்தில் பாலியல் தூண்டுதல் அதன் உச்சத்தில் இருக்கும்.
தம்பதிகள் இரவு நேர உடலுறவுக்குப் பதிலாக காலை உடலுறவைத் தேர்ந்தெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக ஆற்றல்
பொதுவாக அனைவரும் காலையில் அதிக சுறுசுறுப்பாக உணர்கிறார்கள், இது மிகவும் சுவாரஸ்யமான பாலியல் அனுபவங்களுக்கு வழிவகுக்கும். நல்ல தூக்க பழக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கும், நன்றாக ஓய்வெடுக்கும் உணர்வுடன் எழுந்திருப்பவர்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும். போதுமான ஆற்றல் கையில் இருப்பதால், காலை நேர உடலுறவு மேலும் இன்பமாகிறது.
ஹார்மோன் மாற்றங்கள்
திருப்திகரமான பாலியல் வாழ்க்கைக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மிகவும் அவசியம். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவுகள் பெரும்பாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் காலையில் அதிகமாக இருக்கும், இது லிபிடோ மற்றும் பாலியல் ஆசையை அதிகரிக்கும். இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது எளிதானது, ஏனெனில் தம்பதிகள் இருவரும் உற்சாகமாக உணருவார்கள் மற்றும் நல்ல உடலுறவுக்கான உயவுத்தன்மையில் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்.
புத்துணர்ச்சி
நிம்மதியான இரவு தூக்கத்திற்குப் பிறகு, பலர் காலை நேரத்தில் புத்துணர்ச்சியாக உணர்கிறார்கள், இது நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது மற்றும் பாலியல் நெருக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். காலை நேர உடலுறவு தம்பதிகள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
தனிமையான நேரம்
காலை நேரம் மிகவும் அமைதியானது, ஏனெனில் இது நாள் பிஸியாகத் தொடங்குவதற்கு முன் தம்பதிகளுக்கு அமைதியான மற்றும் தனிமையான நேரத்தைக் கொடுக்கும். இது சிறப்பான உடலுறவுக்கு நெருக்கமான மற்றும் நிதானமான சூழ்நிலையை உருவாக்கலாம்.
சிறப்பான தொடக்கம்
உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதன் மூலம் நாளைத் தொடங்கினால் அந்த நாளின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். கூடுதலாக, நீங்கள் காலையிலேயே உச்சக்கட்டத்தை அடைந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும், நன்றாகவும் உணருவீர்கள். இந்த உணர்வுகள் நாளை சரியாகத் தொடங்கவும், நாள் முழுவதும் அதே உற்சாகத்துடன் இருக்கவும் உதவும்.



Click it and Unblock the Notifications

