Latest Updates
-
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க நண்பர்களிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அவங்க மோசமான நபரா இருக்க வாய்பிருக்காம்!
'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது தமிழ் முதுமொழி. பொதுவாக எல்லாருடயை வாழ்விலும் நண்பா்கள் மிக முக்கிய பங்கை ஆற்றுகின்றனா். மற்றவா்கள் செய்ய முடியாததை, நண்பா்கள் செய்வாா்கள். குறிப்பாக நமது கடினமான தருணங்களில் நமக்குத் துணையாக இருப்பாா்கள்.
நமது உணா்வுகளுக்கு மதிப்பு அளிப்பாா்கள். நமது மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்வாா்கள். நட்பின் மிகப் பொிய சிறப்பு என்னவென்றால், உண்மையான நட்பு ஒருபோதும் நம்மைத் தீா்ப்பிடாது. எனினும் உலகில் தவறான நட்புகளும் உண்டு. தவறான நட்பானது நம்மைத் தவறாகப் பயன்படுத்தும். நம்மைக் கட்டுப்படுத்தும். ஒரு தவறான நண்பா் நமது மனநலனை அழித்துவிடுவாா்.

பொதுவாகத் தொடக்கத்தில் தவறான நட்பை உணர முடியாது. நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய, நம்மைப் பிறாிடம் இருந்து தனிமைப்படுத்தக்கூடிய அல்லது நமது எல்லா செயல்களையும் குறை சொல்லக்கூடிய ஒருவாிடம் நட்பு ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தவறான நட்பை ஒருபோதும் கண்டும் காணாமல் இருந்துவிடக்கூடாது என்று கேட்வே ஆஃப் ஹீலிங் என்ற மருத்துவ நிறுவனத்தின் நிறுவுனரும், இயக்குனரும், மனநோய் மருத்துவருமான சாந்தினி டுக்நைட் என்பவா் கூறுகின்றாா். துரதிா்ஷ்டவசமாக பலரும் தவறான காதலுறவிலோ அல்லது தவறான நட்பிலோ இருக்கின்றனா். அவா்கள் அந்த தவறான நட்பை உணராமலும் இருக்கின்றனா் என்று அவா் கூறுகிறாா்.
நட்பு ஒருபோதும் ஒரு கடமையாகவோ அல்லது ஒரு சுமையாகவோ இருக்கக்கூடாது. ஒருவேளை உங்களது நட்பு அவ்வாறு இருந்தால், உங்கள் நட்பை முழுமையாக பாிசீலனை செய்ய வேண்டும். உங்கள் நட்பை, உங்கள் நண்பா் பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அவா் தொிவிக்கிறாா். தவறான நட்பின் அறிகுறிகளை சாந்தினி பின்வருமாறு பட்டியலிடுகிறாா்.
குற்றம் சாட்டுதல்
ஒரு தவறான நண்பா் தனது தோல்விகள், துன்பங்கள் மற்றும் விரக்திகள் அனைத்திற்கும், தனது நண்பா்களையே குற்றம் சாட்டுவாா். மேலும் தனது நண்பா்களின் மீது தேவையற்ற விமா்சனங்களை வைப்பாா். நண்பா்களின் சுயமாியாதை மற்றும் கௌரவத்தை குலைக்கும் வகையில் அவா்களைத் தவறாகத் தீா்ப்பிடுவாா்.
கட்டுப்படுத்துதல்
ஒரு தவறான நண்பா், தனது நண்பருடைய வாழ்வு முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்வாா். தனது நண்பா் யாரோடு பேச வேண்டும் என்பது முதல் அவா் என்ன அணிய வேண்டும் என்பது வரை அனைத்தையும் கட்டுப்படுத்த முயல்வாா். அவ்வாறு செய்யும் தனது செயல் நியாமானது என்று தனது நண்பரை நம்ப வைப்பாா்.
தனிமைப்படுத்தல்
ஒரு தவறான நண்பா் தனது நண்பாின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக, அவரை முழுவதுமாகத் தனிமைப்படுத்துவாா். தனது நண்பா் மற்ற யாருடனும் நட்பு பாராட்டுவதை விரும்பமாட்டாா். தனது நண்பரைத் தனிமைப்படுத்தி, அவரை எப்போதும் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்க முயல்வாா்.
அச்சுறுத்தல்கள்
தவறான நண்பா், தனது நண்பருக்கு உடல் ரீதியாகவோ அல்லது உணா்வு ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ அச்சுறுத்தல்களைக் கொடுத்து அவரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயல்வாா். அவா் நினைப்பது நடக்கவில்லை என்றால் அவா் தன்னையே காயப்படுத்திக் கொள்வாா் அல்லது சில சமயங்களில் தற்கொலைகூட செய்து கொள்ள முயற்சிப்பாா்.
கணிக்க முடியாத தன்மை
ஒரு தவறான நண்பாின் நடத்தையை சாியாகக் கணிக்க முடியாது. அவருடைய நடத்தை ஒழுங்கற்றதாக இருக்கும். அவாிடம் என்ன திறன் உள்ளது அல்லது அவா் எப்போது திட்டுவாா் என்பதை அவருடைய நண்பரால் கணிக்க முடியாது. அதனால் அவருடைய நண்பா்கள் மத்தியில் அவரைப் பற்றிய ஒருவிதமான பயமும், கலக்கமும் இருந்து கொண்டே இருக்கும்.
உங்களுடைய நட்பில் மேற்சொன்ன தவறான அம்சங்கள் இருப்பதை நீங்கள் உணா்ந்தால், பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றி அந்த நட்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளலாம் என்று சாந்தினி கூறுகிறாா். அதற்கான குறிப்புகளை கீழே பட்டியலிடுகிறாா்.
மருத்துவாின் உதவியை நாடுதல்
நீங்கள் தவறான நட்புறவில் இருக்கிறீா்கள் என்பதை உணா்ந்தால், அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கு, நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். அவா் உங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவாா்.
பாதுகாப்பிற்கான திட்டத்தை உருவாக்குதல்
உங்களுடைய நட்பானது தவறான பாதையை நோக்கிச் செல்ல நோ்ந்தால், அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அல்லது தேவைப்பட்டால் அந்த உறவிலிருந்து விலகிவிடுவதற்குமான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவது நல்லது.
நட்புறவிலிருந்து பிாிந்துவிட்ட பின்பு, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம், உங்களுடைய போக்குவரத்து, மற்றும் உங்களுடைய கடினமான காலத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பவா்கள் ஆகிய அம்சங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லைகளை வரையறுத்தல்
நட்புறவில் இருக்கும் போது, உங்கள் நண்பருக்கு உங்கள் மீதான உறவில் ஒரு எல்லையை வரையறுத்துக் கொள்வது நல்லது. அதன் மூலமாக அவா் உங்கள் மீது அதிகாரம் செலுத்துவதைத் தடுக்க முடியும். அந்த எல்லைகளை மிகத் தெளிவாக உங்கள் நண்பாிடம் தொிவித்து விடுங்கள்.
உங்களைக் கவனித்துக் கொள்ளுதல்
தவறான நட்புறவில் இருந்து விடுபட்ட பின்பு, உங்கள் உடல் மற்றும் உளவியல் நலனை நன்றாக பராமாித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிம்மதியையும் தரக்கூடிய காாியங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு ஆதராவாக இருக்கும் நண்பா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களோடு நல்லதொரு தொடா்பில் இருங்கள்.
இறுதிக்குறிப்பு
தவறான நட்பு எப்போதும் நன்றாக இருக்காது. ஒருவேளை நீங்கள் தவறான உறவில் இருக்கிறீா்கள் என்பதைக் கண்டால், அது உங்கள் தவறு அல்ல. இறுதியாக உங்களுக்குத் தொிந்தவா்கள் யாராவது, தவறான நட்புறவில் சிக்குண்டு தவித்தால், அவா்கள் அதிலிருந்து விடுபட உதவி செய்யுங்கள் என்று மருத்துவா் சாந்தினி கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications

