Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய 'இந்த' 3 வழிகள ஃபாலோ பண்ணா போதுமாம்... திருப்தி நிச்சயமாம்!
திரைப்படங்கள் மற்றும் ஆபாச படங்களில் தோன்றுவது போல் உடலுறவில் உச்சக்கட்டம் அடைவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், பெரும்பலான தம்பதிகள் சலிப்பான பாலியல் வாழ்க்கையை கொண்டிருப்பதாகவும், 90% சதவீத பெண்கள் உச்சக்கட்டம் அடையாமல் போலியான உச்சக்கட்டம் அடைவதாகவும் பல ஆய்வுகள் கூறுகின்றன.
உடலுறவு பற்றியும் உச்சக்கட்டம் பற்றியும் பல்வேறு கட்டுக்கதைகள் இங்கே உலாவருகின்றன. ஆனால், அவை எல்லாம் உண்மையானவை கிடையாது. அறிவியல் கூறும் விஷயங்களை மட்டும் உண்மையாக கருத வேண்டும். உடலுறவு என்பது உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் ஓர் அற்புதமான உணர்வு. இதில், நீங்கள் உச்சக்கட்டத்தை அடைவது என்பது பரவசநிலையை அடைவது போன்றது.

ஆனால், பெரும்பலான தம்பதிகள் உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை பெறாமல் இருக்கிறார்கள். திருப்தியை பெற நீங்கள் சில விஷயங்களை உங்கள் பாலியல் வாழ்க்கையில் முயற்சி செய்ய வேண்டும். அந்த தந்திரங்கள் உங்களுக்கு க்ளைமாக்ஸில் உதவும். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உச்சக்கட்டம் அடைவது என்றால் என்ன?
உடலுறவுக்கான ஆர்வம் குறையும்போது, அது உச்சக்கட்டம் அடைவதை கடினமாக்கும். உச்சக்கட்டத்தை பற்றி புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில், இது ஆண், பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. பாலியல் ஆர்வம் தூண்டுதல் மற்றும் செயல்பாடுகள் பொறுத்து தம்பதிகள் உச்சக்கட்டம் அடையலாம்.
புணர்ச்சியின் அறிவியலைப் பற்றி பேசும்போது, "பாலியல் மறுமொழி சுழற்சி" என்று ஒரு விஷயம் உள்ளது, இது நான்கு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது. அவை பாலியல் உற்சாகம், ஆண்குறியின் தூண்டுதல், உச்சக்கட்டம் மற்றும் தீர்மானம். எனவே, அடிப்படையில் உச்சகட்டம் என்பது நீங்கள் பரவசத்தின் உச்சத்தை அடையும் நிலையை குறிக்கிறது.
சோசியோஆஃபெக்டிவ் நியூரோ சயின்ஸ் & சைக்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சில சமயங்களில் உச்சியை உணர்திறன் ஏற்பிகளின் அதிக செறிவு கொண்ட உடல் உறுப்புகளின் தூண்டுதல் மூலமும் ஏற்படுத்தலாம். இது முக்கியமாக பிறப்புறுப்புகளுக்கு அருகில் நிகழ்கிறது.
பிறப்புறுப்புகளின் தூண்டுதல் உச்சக்கட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது. ஆனால், எல்லாரும் ஒரே மாதிரி உச்சக்கட்டம் அடைவதில்லை. பெரும்பாலும், ஆண்கள் விரைவிலேயே உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு சிறிது நேரம் எடுக்கும்.
பெரும்பலான பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டம் அடையாமல் இருப்பதற்கு மன அழுத்தம் ஒர் முக்கிய காரணமாக இருக்கலாம். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ரிப்ரொடக்டிவ் பயோமெடிசின் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, உடல் ரீதியான தடைகள் மட்டுமல்ல, மன அழுத்தம் போன்ற உளவியல் தடைகளும் உங்கள் மகிழ்ச்சியைத் தடுக்கலாம்.
ஃபோர்பிளே
விரைவிலேயே பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை சலிப்பாக மாறுவதற்கு ஃபோர்பிளே இல்லாத உடலுறவு ஓர் காரணமாகும். உடலுறவில் ஈடுபடும்போது, உடனடியாக இறுதி கட்டத்தை நோக்கி செல்ல வேண்டிய அவசியமில்லை.
மெதுவாக செயல்களை தொடங்கலாம். எனவே, உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு, அந்த உற்சாகத்தை உருவாக்க, உங்கள் மூளையில் உள்ள பெரோமோன்களை சிறிது பம்ப் செய்ய ஃபோர்பிளேவில் ஈடுபடுங்கள். உடலுறவு என்பது ஊடுருவலைப் பற்றியது அல்ல. அது உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை பற்றியதும் கூட.
நீங்கள் அந்த அளவிலான பரவசத்தை அடைவதை உறுதிசெய்ய உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே விஷயங்களை மசாலாப் படுத்த வேண்டும். எனவே, உங்கள் துணையுடன் ஃபோர்பிளேவில் ஈடுபட தொடங்குங்கள்.
கெகல் பயிற்சிகள்
கெகல் பயிற்சிகள் இடுப்பு தசையை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மருத்துவ அறிவியல் மானிட்டர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அவை உச்சக்கட்டத்தை அதிகரிக்கவும் தூண்டவும் உதவுகின்றன.
உங்கள் வீட்டில் நீங்கள் செய்யக்கூடிய சில எளிய கெகல் பயிற்சிகள் பிரிட்ஜ் போஸ், ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் குந்துகைகள். இவற்றை நீங்கள் தினமும் செய்யலாம். இது உங்கள் உடல் எடையை குறைத்து, ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
ஈரோஜெனஸ் மண்டலங்களைத் தூண்டுதல்
ஈரோஜெனஸ் மண்டலங்களைத் தூண்டுதல் என்பது இருவழிப் பாதை. உங்களை மிகவும் தூண்டும் ஈரோஜெனஸ் புள்ளிகளை உங்கள் பங்குதாரர் அறிந்திருக்க வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் உடலில் பாலியல் தூண்டலை அதிகரிக்க உதவும் தூண்டுதல் புள்ளி இருக்கிறது. அந்த இடங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஜர்னல் ஆஃப் எவிடென்ஸ்-பேஸ்டு காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்நேட்டிவ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கழுத்து, காதுக்குப் பின்னால் உள்ள ஈரோஜெனஸ் புள்ளிகள், உச்சியை அடைய உதவும். அத்துடன் பிறப்புறுப்புகளைத் தூண்டுவது உங்கள் உச்சக்கட்டத்தை அதிகரிக்கவும், உங்கள் லிபிடோவையும் அதிகரிக்கவும் உதவும் என்று ஆய்வு கூறுகிறது.
அதைத் தவிர, இந்த நேரத்தில் உச்சக்கட்டம் அடையவில்லை என்று நினைத்து நீங்கள் கவலைப்படக்கூடாது. ஏனெனில், இது உங்கள் மகிழ்ச்சியை அழிக்கக்கூடும்.நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளும்போது, உச்சக்கட்டத்தை அடையலாம். அதற்காக வருத்தப்பட தேவையில்லை. மேலே கொடுக்கப்பட்டுள்ள தந்திரங்களை உங்கள் பாலியல் வாழ்க்கையில் முயற்சி செய்து, பாலியல் வாழ்க்கையை மசாலாவாக்குங்கள்.



Click it and Unblock the Notifications












