நீங்க 'இப்படி' இருக்கும்போது உடலுறவில் ஈடுபடுறீங்களா? அப்ப அது ஆபத்தானதாம்... நல்லது இல்லையாம்!

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் இருந்தாலோ அல்லது மன அழுத்தமாகவோ இருந்தாலோ, அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது நல்லதல்ல. உடலுறவு தம்பதிகளின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், அதை பிரச்சனைகளை சமாளிக்கும் வழியாகப் பயன்படுத்தினால், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டிய நேரம் இது.

செக்ஸ் ஓர் அற்புதமான உணர்வையும் இன்பத்தையும் தரும். தம்பதிகள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியான நிலையில் உடலுறவில் ஈடுபடும்போது அந்த இன்பத்தை நீங்கள் பெறலாம். ஆனால், மகிழ்ச்சிக்காகவும், உறவில் நெருக்கத்தை அதிகரிப்பதற்காகவும், குழந்தைகளை பெற்று கொள்வதற்காகவும்தான் எல்லாரும் உடலுறவு கொள்கிறார்கள்.

Signs Of Unhealthy Relationship With Intercourse In Tamil

வாழ்க்கையில் எதிர்மறையான விஷயம் ஒன்று நடக்கும்போது, நமக்குப் பிடித்தமான உணவுகளை சாப்பிட சிலர் விரும்பலாம் அல்லது பொதுவாக பிடித்தமான விஷயங்களைச் செய்ய விரும்பலாம். இன்னும் சிலர் மன அழுத்த சூழ்நிலைகளைச் சமாளிக்க உடலுறவில் ஈடுபட விரும்பலாம். தம்பதிகளின் பிரச்சனைகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள் சிக்கலானவை மற்றும் நபருக்கு நபர் மாறுபடும் என்பது உண்மைதான்.

சிலருக்கு, உடலுறவை சமாளிக்கும் பொறிமுறையாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால், துக்கம் அல்லது மன அழுத்தத்தை சமாளிக்க இதைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு தம்பதிகளுக்கும் அவர்களின் அனுபவங்கள் கண்டிப்பாக மாறுபடலாம்.

அந்த வகையில், உடலுறவுடன் ஆரோக்கியமற்ற உறவில் இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்றும், அவற்றிலிருந்து உங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டாய அல்லது அடிமையாக்கும் நடத்தை

தம்பதிகள் இருவரும் இணைந்து இருவரின் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது. உடலுறவில் இருவரின் சம்மதமும் மிக முக்கியம். அவை இல்லாமல், கட்டாயப்படுத்தப்பட்டு உடலுறவுக்கு அடிபணிய வைப்பது ஆரோக்கியமற்ற உறவின் அறிகுறியாக இருக்கும்.

ஆரோக்கியமற்ற உறவில் உடலுறவு அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது ஒரு கட்டாய அல்லது அடிமையாக்கும் நடத்தையாக மாறும். அங்கு தம்பதிகளில் ஒருவர் தனது பாலியல் தூண்டுதல்கள் அல்லது நடத்தைகள் மீது கட்டுப்பாடு இல்லாததை உணரலாம். எதிர்மறையான விளைவுகள் இருந்தபோதிலும் அவர்கள் ஆபத்தான அல்லது பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகளில் ஈடுபடலாம்.

சமாளிக்கும் வழியாக பயன்படுத்துதல்

பொதுவாக தம்பதிகள் மகிழ்ச்சியான மனநிலையில், உடலுறவு கொள்கிறார்கள். ஆனால், சிலர் அதற்கு எதிர்மாறாக மன அழுத்தம், உணர்ச்சி வலி அல்லது பிற வாழ்க்கைச் சவால்களைச் சமாளிப்பதற்கான முக்கிய வழியாக உடலுறவை பார்க்கிறார்கள்.

பிரச்சனைகளை மற்றும் உறவில் உள்ள சிக்கல்களை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான உத்திகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் தப்பிக்கும் அல்லது கவனச்சிதறலுக்கான வழிமுறையாக உடலுறவை நம்பி இருக்கிறார்கள். இது உடலுறவுடன் இணைந்த ஆரோக்கியமற்ற உறவில் இருப்பதற்கான அறிகுறியாகும்.

அன்றாட வாழ்வில் குறுக்கீடுவது

தம்பதிகள் இருவருக்கும் தங்கள் பாலியல் வாழ்க்கையை பற்றி பல்வேறு ஆசைகளும் கனவுகளும் இருக்கும். தம்பதிகள் இருவரில், ஒரு நபர் உடலுறவில் மிகவும் ஆர்வமாக இருக்கலாம். அது அவர்களின் அன்றாட செயல்பாடு மற்றும் உறவுகளில் தலையிடத் தொடங்குகிறது.

இதனால், அவர்கள் தங்கள் பொறுப்புகளை புறக்கணிக்கலாம். வேலை அல்லது தொழிலில் சிரமங்களை சந்திக்கலாம் அல்லது உடலுறவின் மீது அதிக கவனம் செலுத்துவதால் உணர்ச்சி ரீதியான இணைப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம்.

நெருக்கம் தொடர்பான பிரச்சினைகள்

தம்பதிகள் தங்கள் உறவை வலுவானதாக மாற்ற நெருக்கம் மிக அவசியம். ஆனால், தம்பதிகளுக்குள் திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பிக்கும். மகிழ்ச்சியான ஆரோக்கியமான உடலுறவு மீண்டும் தம்பதிகளுக்குள் நெருக்கத்தை உருவாக்கும்.

உடலுறவின் மூலம் உணர்ச்சி ரீதியான தொடர்பு மற்றும் நெருக்கத்தைத் தேடுவதற்குப் பதிலாக, சிலர் பெரும்பாலும் உணர்ச்சி பாதிப்பு அல்லது உண்மையான நெருக்கத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக உடலுறவைப் பயன்படுத்துகிறார்.

அவர்கள் பலருடன் பாலியல் உறவுகளில் ஈடுபடலாம். ஆனால் தங்கள் கூட்டாளர்களுடன் ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்க சிலர் போராடுகிறார்கள்.

எதிர்மறை உணர்ச்சி விளைவுகள்

தற்காலிக நிவாரணமாக மகிழ்ச்சியான உடலுறவு இருந்தபோதிலும், சில நபர்கள் குற்ற உணர்வு, அவமானம் அல்லது வருத்தம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகரமான விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வடிவங்களை நீங்கள் உணர்ந்து, மன உளைச்சலை உணர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Story first published: Thursday, July 13, 2023, 16:44 [IST]
Desktop Bottom Promotion