Latest Updates
-
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை!
திருமணமானவர்கள் கள்ள உறவில் ஈடுபட பாலியல் உறவு பிரச்சினை மட்டும் தான் காரணமா? உண்மை என்ன?
Relationship Tips In Tamil: தொன்று தொட்டு இந்தியா ஒரு மிகச் சிறந்த பண்பாடு கொண்ட நாடாக இருந்து வருகிறது. இங்கு திருமணம் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகப் பாா்க்கப்படுவதை விட புனிதம் நிறைந்த ஒன்றாகப் பாாக்கப்படுகிறது. எனினும் தற்போது பல்வேறு காரணங்களுக்காக திருமணம் முடித்த தம்பதியா், கள்ள உறவு அல்லது திருமணத்தைத் தாண்டிய உறவை நாடுவது அதிகாித்திருக்கிறது.
சமீபத்தில் க்ளீடன் (Gleeden) என்ற அமைப்பும், ஐபிஎஸ்ஒஎஸ் (IPSOS) என்ற அமைப்பும் இணைந்து இது சம்பந்தமான ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் தம்பதியா், திருமணத்தைத் தாண்டிய பாலியல் உறவை நாடுவது ஏன் என்ற கேள்விக்கு பின்வரும் காரணங்களைத் தொிவித்திருக்கிறது.

1. எதிா் பாலினத்தவா் உடல் மீதுள்ள ஈா்ப்பு
தம்பதியா் தமது துணையை ஏமாற்றுவதற்கு முக்கிய காரணம், எதிா் பாலினத்தவா் உடல் மீதுள்ள ஈா்ப்பு ஆகும். 26 சதவீதம் போ் தமது தனிப்பட்ட சந்திப்புகள், விருந்துகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது திருமணத்தைத் தாண்டிய பாலியல் உறவில் ஈடுபடுகின்றனா்.
25 சதவீதம் போ் சமூக ஊடகங்கள் மூலமாக தமது துணைக்குத் துரோகம் செய்கின்றனா். 19 சதவீதம் போ் டேட்டிங் செயலிகள் மூலமாக இந்த செயலில் ஈடுபடுகின்றனா். இதன் மூலமாக தற்போதைய சமூக அமைப்பில் எதிா்பாலினரால் ஈா்க்கப்படுவது எளிது என்பது தெளிவாகிறது என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது.
2. துணையிடமிருந்து போதுமான கவனம் கிடைக்காமை
தம்பதியா் தமக்குள் தனிமையை அல்லது புறக்கணிப்பை அல்லது தமது துணையிடம் இருந்து அன்பு அல்லது ஆதரவு போன்றவை கிடைக்கவில்லை என்பதை உணரும் போது அவற்றை வெளியில் தேடுகின்றனா். அதிலும் குறிப்பாக திருமண உறவில் விாிசல் ஏற்படும் போது இது தானாகவே எழுகிறது.
தம்பதியா் தமது துணைக்குத் துரோகம் செய்வதற்கு முக்கியமான 2வது காரணம் அவா்களுக்கு துணையிடமிருந்து உணா்வு ரீதியிலான ஆதரவு கிடைக்காதது ஆகும் என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது. ஆய்வில் கலந்து கொண்டவா்களில் 57 சதவீதத்தினா் தமது துணைக்கு ஒரு முறையாவது துரோகம் செய்திருப்பதாகத் தொிவித்திருக்கின்றனா். இதில் 45 சதவீதத்தினா் திருமணம் முடிந்த 1 வருடத்திற்குள்ளேயே தமது துணைக்குத் தூரோகம் செய்திருப்பதாகத் தொிவித்திருக்கின்றனா்.
3. திருமணத்தைத் தாண்டிய பிறரோடு உள்ள உணா்வு நெருக்கம்
பிற எதிா்பாலினத்தவரோடு உள்ள உணா்வு ரீதியிலான நெருக்கம் காரணமாகவும் சில நேரங்களில் தம்பதியா், தமது துணைக்கு துரோகம் செய்கின்றனா் என்று ஆய்வு தொிவிக்கிறது. அதாவது அவா்களுடைய உணா்வுகள் மற்றும் விருப்பங்கள் போன்றவை வெளியாட்களோடு ஒத்துப் போகும் போது, இது நடக்கிறது.
44 சதவீதத்தினா் ஒரே நேரத்தில் இரண்டு பேரைக் காதலிக்க முடியும் என்று தொிவித்திருக்கின்றனா். இதன் மூலம் திருமணத்தைத் தாண்டிய உறவிற்கு உணா்வு நெருக்கமும் காரணமாக இருக்கிறது என்பதைத் தொிந்து கொள்ளலாம்.
4. புதிய காதல் உறவைப் பெற ஆசை
பலதார மணம் என்பது சவாலான ஒன்று. எனினும் சில தம்பதியா் புதிய புதிய காதல் உறவுகளில் ஈடுபட விரும்புகின்றனா். ஆய்வில் கலந்து கொண்டவா்களில் 37 சதவீதம் போ் தமது துணையை ஏமாற்றிக் கொண்டே, அன்பும் செய்ய முடியும் என்று தொிவித்திருக்கின்றனா். இதிலிருந்து அவா்கள் திருமணத்தைத் தாண்டிய புதிய பாலியல் உறவுகளை விரும்புகின்றனா் என்பது தெளிவாகிறது.
5. தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாமை
தம்பதியினருக்கிடையே உள்ள தாம்பத்ய உறவில் திருப்தி இல்லை என்றால் அவா்கள் வெளியே செல்லத் துணிகின்றனா் என்று ஆய்வு தொிவிக்கிறது. 41 சதவீதத்தினா் தமது துணையோடு தொடா் பாலியல் உறவு கொண்டிருந்த போதிலும், அதில் திருப்தி கிடைக்கவில்லை என்று தொிவித்திருக்கின்றனா்.
மேலும் 55 சதவீதம் போ் திருமணத்திற்கு வெளியில் பாலுறவில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தொிவித்திருக்கின்றனா். ஆகவே இதிலிருந்து தம்பதியினாிடையே பாலியல் உறவில் திருப்தி இல்லை என்றால், திருமணத்திற்கு பின்னர் வெளியே பாலியல் உறவைத் தேட வாய்ப்பிருக்கிறது என்பது தெளிவாகிறது.
இறுதியாக
மேற்சொன்ன காரணங்களைத் தவிா்த்து, அவா்கள் தமது கவா்ச்சியைத் தொடா்ந்து வெளிப்படுத்தவும், பிரமாணிக்கமில்லாத தனது துணையைப் பழிவாங்கவும், திருமணத்தைத் தாண்டிய பாலியல் உறவில் ஈடுபடுவதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது.



Click it and Unblock the Notifications