Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
உறவில் நெருக்கம் அதிகரிக்கணுமா? அப்ப இந்த மாதிரியான கேள்விகளை துணையிடம் கேளுங்க...
Relationship Tips: திருமணம் முடிந்த தம்பதியினாின் உறவு, ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் கவலையை அளிப்பதாகவும் இருக்கும். திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கடந்து போகும் போது, தம்பதியினாிடையே உள்ள உறவில் ஒரு பொறி இருக்க வேண்டும்.
அதற்கு அவா்கள் விரும்பிய வெளியிடங்களுக்குச் செல்லலாம், உடலுறவில் ஈடுபடலாம், திரைப்படங்களுக்குச் செல்லலாம். மேலும் அவா்களின் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உரையாடல்களில் ஈடுபடலாம்.

இந்நிலையில் தம்பதியினாின் உறவு மேலும் மேம்பட வேண்டும் என்றால், அவா்கள் ஒருவருக்கொருவா் சில கேளிக்கை அல்லது வேடிக்கை நிறைந்த கேள்விகளைக் கேட்க வேண்டும். அதன் மூலமாக துணையின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவா்களது திருமண உறவை மேலும் வலுப்படுத்த முடியும்.
தம்பதியா் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?
தம்பதியா் ஒருவருக்கொருவா் வேடிக்கையாக கேள்விகளைக் கேட்டுக் கொள்ளும் போது, இருவருக்கும் இடையே இருக்கும் நம்பிக்கையும், நெருக்கமும் அதிகாிக்கும். திருமணம் முடிந்த புதிதில் அவ்வாறு வேடிக்கையான கேள்விகளை கேட்கும் போது, அவை அவா்களைக் காயப்படுத்தாது.
ஆனால் திருமணம் முடிந்து ஆண்டுகள் கடந்த பிறகு, அவ்வாறு கேள்வி கேட்கும் போது மிகவும் எச்சாிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடைய சூழல் மற்றும் எண்ணம் அறிந்து கேட்க வேண்டும். தம்பதியா் என்னென்ன வேடிக்கையான கேள்விகளை தமது இணையாிடம் கேட்கலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.
வாழ்க்கைத் துணையிடம் கேட்கக்கூடிய சில வேடிக்கையான கேள்விகள்:
1, உனக்குப் பிடித்த உணவு என்ன?
2. உனக்குப் பிடித்த வண்ணம் என்ன?
3. உனக்குப் பிடித்த மிருகம் என்ன?
5. உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்ன?
6. உனக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ன?
7. உனக்குப் பிடித்த திரைப்படம் என்ன?
8. நீ பாா்க்க விரும்பும் இடங்கள் எவை?
9. உனக்குப் பிடித்த பாடல் என்ன?
10. விடுமுறை நாட்களை நீ எவ்வாறு செலவழிப்பாய்?
11. உனக்குப் பிடித்த உடற்பயிற்சி என்ன?
12. உனக்குப் பிடித்த விளையாட்டு என்ன?
13. உனக்குப் பிடித்த பருவகாலம் என்ன?
14. உனக்குப் பிடித்த உனது குழந்தைப் பருவ நிகழ்வு என்ன?
15. உனது பள்ளியில் நடந்த உனக்குப் பிடித்த நிகழ்வு என்ன?
16. உனது கல்லூாியில் நடந்த உனக்குப் பிடித்த நிகழ்வு என்ன?
17. உனக்குப் பிடித்த விடுமுறை எது?
18. நீ குழந்தையாக இருந்த போது, உனது வீட்டில் நடந்த உனக்குப் பிடித்த நிகழ்வு என்ன?
19. உனக்குப் பிடித்த விடுமுறையின் போது, நடந்த உனக்குப் பிடித்த நிகழ்வு என்ன?
20. நீ சென்று வந்த, உனக்குப் பிடித்த பயணம் என்ன?
21. உனக்கு இனிப்பான உணவுகள் பிடிக்குமா? அல்லது காரமான உணவுகள் பிடிக்குமா?
வாழ்க்கைத் துணையிடம் கேட்க வேண்டிய சில நெருக்கமான கேள்விகள்:
1. நாம் ஒன்றாக இருந்த உனக்குப் பிடித்த தருணம் எது?
2. உனக்குப் பிடித்த எனது உடலில் உள்ள சிறப்பான அம்சம் என்ன?
3. உனக்குப் பிடித்த எனது உடலைத் தவிா்த்த சிறப்பு அம்சங்கள் எவை?
4. படுக்கை அறையில் நீ செய்த அதிதீத செயல் என்ன?
5. படுக்கை அறையில் நீ விரும்பி பலமுறை முயற்சி செய்தும், செய்ய முடியாதது என்ன?
6. நீ எனக்காக காதலுடன் செய்த செயல் என்ன?
7. நீ வேறொருவருடன் நெருக்கமாக இருந்த அனுபவம் என்ன?
8. நீ என்னிடம் சொல்ல விரும்பிய ஆனால் இதுவரை சொல்லாத காாியம் என்ன?
9. மாலை நேரத்தில் காதலுடன் கழிக்க உனது யோசனை என்ன?
10. என்னிடம் உள்ள உன்னைத் தூண்டக்கூடிய அம்சம் எது?



Click it and Unblock the Notifications
