For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமசூத்ராவில் பெண்கள் சிறப்பான கலவியை அனுபவிக்க கூறப்பட்டிருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

|

காமசூத்ரா என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களை வழிநடத்தும் ஒரு நூலாகும். இது பாலியல் தொடர்பான அனைத்து தகவலையும் கொண்டுள்ளது, இது மக்களின் பாலியல் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்றும். இந்து தத்துவஞானி வத்ஸ்யனா அவர்களால் கி.பி 400 முதல் 200 வரை காமசூத்திரத்தை எழுதினார். இந்த புத்தகத்தில் உடலுறவு பற்றி வெளிப்படையாக எழுதப்பட்டுள்ளது.

காமசூத்ரா சிறந்த பாலியல் உறவுகள் பற்றி பல நுட்பங்களை கூறியுள்ளது. இந்த புத்தகத்தில் பெண்களுக்கான சில சிறப்பு குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சுகாதாரம் மற்றும் சீர்ப்படுத்தல் போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் பாலியல் அனுபவத்தின் முன்னேற்றத்துடன், பரஸ்பர உறவில் ஒரு இனிமையும் உள்ளது. பெண்கள் தங்கள் கூட்டாளரை கவர்ந்திழுக்க என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது காமசூத்ராவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிவயிற்றுகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்

அடிவயிற்றுகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்

முதலில் நீங்கள் உங்கள் அடிவயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அழுக்கான அடிவயிற்று உங்கள் பாலியல் உறவை கலைக்கக்கூடும். ஆண்களும் தெளிவான அடிவயிறு இருக்கும் பெண்களைத்தான் விரும்புகிறார்கள். எனவே காதல் அமர்வுக்கு முன் அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்த்துவிடுங்கள்.

கை, கால்களை சுத்தமாக வைத்திருங்கள்

கை, கால்களை சுத்தமாக வைத்திருங்கள்

ஆண்கள் எப்போதும் சுத்தமான சருமம் கொண்ட பெண்கள் மீது ஈர்க்கப்படுவார்கள், அடிவயிற்றுகளை சுத்தம் செய்தபின் ஒருவர் கை, கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற வேண்டும். ஏனென்றால், முடி கொண்ட பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. இதற்காக நீங்கள் வேக்ஸையும் பயன்படுத்தலாம்.

சிகை அலங்காரம்

சிகை அலங்காரம்

உடல் அழகிற்கு பிறகு முடியை அலங்கரிக்கும் நேரம் இது. உங்கள் தலைமுடி உங்கள் கூட்டாளரை உங்களை நோக்கி வேகமாக ஈர்க்கிறது, அதனால்தான் உடலுறவின் போது உங்கள் முடியை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்று காமசாஸ்திரம் கூறுகிறது.

MOST READ: உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா உங்கள் நுரையீரலை தீவிரமாக தாக்கிவிட்டது என்று அர்த்தமாம்...!

ஆடை தேர்வு

ஆடை தேர்வு

உடலை சுத்தம் செய்தபின், இப்போது உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரமாகும். உங்கள் கீழ் ஆடைகள் உங்கள் பாலியல் உறவின் ஒரு முக்கிய அங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவே உங்கள் கூட்டாளரை உற்சாகப்படுத்தி, உங்களிடம் வரும்படி கட்டாயப்படுத்தும். எனவே அவற்றை கவனமாக தேர்வு செய்யவும்.

சிறிது அலங்காரம்

சிறிது அலங்காரம்

இரவில் அல்லது படுக்கைக்குச் செல்லும் போது மேக்கப் செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள், ஆனால் உடலுறவுக்கு முன் செய்யப்படும் லேசான ஒப்பனை உங்கள் பாலியல் உறவுகளில் ஒரு புதிய ஆற்றலை நிரப்ப முடியும். ஏனென்றால், நெருக்கமாக இருக்கும்போது, ​​நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் துணை உங்களிடம் ஈர்க்கப்படுவார்.

படுக்கையில் ஒத்துழைப்பு

படுக்கையில் ஒத்துழைப்பு

பாலியல் உறவில் அனைத்திற்கும் மேலாக உங்கள் பாலியல் உறவை மேம்படுத்த, நீங்கள் உங்கள் பாலியல் கூட்டாளரை முழுமையாக ஆதரிக்க வேண்டும், இது உங்கள் இருவருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்கும், இதனால் சிறந்த பாலியல் அனுபவம் கிடைக்கும்.

MOST READ: உடலுறவு மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!

உச்சக்கட்டம்

உச்சக்கட்டம்

உடலுறவில் எப்போதும் பெண்களே முதலில் உச்சக்கட்டம் அடைய வேண்டும். அதுமட்டுமின்றி உடலுறவின்போது ஒன்றுக்கும் மேற்பட்ட உச்சக்கட்டத்தை அடைய காமசூத்ரா பரிந்துரைக்கிறது. மேலும் உச்சக்கட்டம் அடைந்த பிறகு தன் ஆணுக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஏனெனில் ஆண்களைப் போலாலம்மால், பெண்கள் உச்சக்கட்டத்திற்குப் பிறகும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love Making Tips For Women According To Kamasutra

Find out the important love-making tips for women, according to Kamasutra.
Story first published: Monday, April 26, 2021, 18:30 [IST]