Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
உறவுகளைப் பொறுத்தவரை சின்ன சின்ன ஆச்சரியங்கள் என்பது காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியமானதாகும்.
உறவுகளைப் பொறுத்தவரை சின்ன சின்ன ஆச்சரியங்கள் என்பது காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியமானதாகும். விசேஷமான தருணங்களில் உங்கள் துணையை ஆச்சரியப்படுத்துவது நல்லதுதான், ஆனால் உங்கள் துணையை தினமும் சிறப்பாக உணரவைக்க நீங்கள் தவறி விடுகிறீர்களா?அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுவது, அவர்களின் முயற்சிகளுக்காக அவர்களைப் பாராட்டுவது இவை அனைத்தும் ஒரு உறவில் உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை அதிகரிக்க உதவலாம். ஒவ்வொரு நாளும் சிறிய முயற்சிகளைச் செய்வதும், அவர்களை மரியாதைக்குரியதாக உணர வைப்பதும் நல்ல திருமணங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடாகும்.

பல தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு ஆதரவான நபரைப் பெற்றதற்காக தங்கள் துணையை ஆழமாக காதலிக்கிறார்கள், ஆனால் காலப்போக்கில், சரியான ஜோடிகளும் ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தகுதியான கவனத்தை கொடுக்காவிட்டால்தவறாக உணரத் தொடங்குவார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் துணையை சிறப்பாக உணர வைப்பவர்க்ளுக்கு காதலர் தினம், பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு போன்ற சந்தர்ப்பங்கள் தேவையில்லை. உங்கள் துணையை சிறப்பாக உணர வைக்க நீங்கள் பணத்தை செலவழிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களின் சில சாதாரண செயல்களே போதும்.

சின்ன சின்ன பாராட்டுக்கள்
அவர்களைப் பற்றி நீங்கள் போற்றும் ஒன்றைப் பற்றிய உண்மையான பாராட்டுகளுடன் உங்களின் நாளைத் தொடங்குங்கள். அது அவர்களின் தோற்றம், அவர்களின் ஆளுமை, அவர்களின் சாதனைகள் என எதுவாகவும் இருக்கலாம்.

உடல்ரீதியான நெருக்கம்
கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் மற்றும் கைகளைப் பிடிப்பது போன்ற உடல்ரீதியான நெருக்கம், உங்கள் துணையை பாராட்டவும் நேசிக்கவும் செய்யும்.

அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்
உங்கள் துணை சொல்வதை உண்மையிலேயே கேட்க நேரம் ஒதுக்குங்கள், மேலும் அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

சிறிய விஷயங்களுக்குப் பாராட்டுங்கள்
வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் மளிகைப் பொருட்களை எடுத்துக்கொண்டாலும் அல்லது இரவு உணவு சமைப்பதாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையை எளிதாக்க உங்கள் துணை செய்யும் சின்ன சின்ன வேலைகளை அங்கீகரித்து பாராட்டுங்கள்.

சர்ப்ரைஸ்களை திட்டமிடுங்கள்
உங்கள் துணைக்கு ஏதாவது சிறப்பான பரிசை அளித்து ஆச்சரியப்படுத்துங்கள், அது ஒரு சிறப்பானப் பரிசாக இருந்தாலும் அல்லது வேடிக்கையான சுற்றுலாவாக இருந்தாலும் சரி, அது உங்கள் துணையை ஆச்சரியப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துங்கள்
நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உங்கள் துணை உங்களுக்கு எவ்வளவு முக்கியானவர்கள் என்று தொடர்ந்து சொல்வதன் மூலம் அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள் மற்றும் பாராட்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டுங்கள்.

ஆதரவாக இருங்கள்
உங்கள் துணைக்கு தேவைப்படும்போது அவர்களுடன் இருங்கள், அது அவர்கள் கவனிப்பதாக இருந்தாலும், அறிவுரை வழங்குவதாக இருந்தாலும் அல்லது அவர்களின் கையைப் பிடிப்பதன் மூலமும் உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள். உங்கள் தலைக்குள் என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
