Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
தம்பதிகளிடையே நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க வழிகள்..!
உறவுகளில் கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு பிரச்னைகள் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இதன் காரணமாக ஈகோ பிரச்னை எழுகிறது..
அதனால் சிறு சண்டைகள் கூட விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய சண்டையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. முதலில் சண்டை வந்தால் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.. அதில் முக்கியமாக உங்கள் துணையின் குடும்பத்தினரை பற்றி எதுவும் பேசக்கூடாது.
2. கணவன் மனைவி இருவருமே ஒருவரின் நிறை குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. யாரும் யாருக்காவும் மாற வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது..
3. ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்னைகள் சரியாகிவிடும்.. பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது. ஒரு பிரச்சனை நடந்தால் அதை பற்றி மட்டுமே பேச வேண்டுமே தவிர வேறு எதை பற்றியும் பேசுவது நல்லதல்ல.
4. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவது அது பல்கிப் பெருகும். அது சிறு சீண்டல்களாகவோ, பாராட்டாகவோ இருக்கலாம். இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்கு. இப்ப கொடுத்த காபி செம்ம என பாசிட்டிவாக பாராட்டி பேசுவது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வது நல்லது.
5. உங்க சண்டையில் வேறு யாரையும் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைந்தால் பிரச்னை வேறு விதமாக மாறும்.. அந்த அந்த நபர் கணவர் அல்லது மனைவின் தாய், தந்தை, அண்ணன், அக்கா, நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்வு காண முயல வேண்டும். யாரையும் உங்களுக்கு நடுவே எப்போதும் கொண்டு வரவே வராதீர்கள்..
6. தினமும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் பார்த்து மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும். அச்சமயத்தில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் நன்கு கவனித்துக் கேட்க வேண்டும். எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது..
7. கணவன் மனைவியின் சண்டையை சமாதானப்படுத்த அல்லது ஒரு துணையை நெருங்கி வர உடலுறவு என்பது முக்கியமான வழியாகும். உங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் அன்பைப் பயன்படுத்த உடல் நெருக்கம் ஒரு சிறந்த வழியாகும். இது தவிர, பாலியல் ஹார்மோன்கள் எப்போதும் உங்களை மகிழ்ச்சியாகவும், மனம் தளர விடாமலும் ஒருவர் மேல் ஒருவர் அன்பாக காதலாக இருக்க வைக்கும்.. எனவே உங்க உடலுறுவு கொஞ்சல்களை தவறாமல் அதிக இடைவேளை விடாமல் தொடர்ந்து செய்துக் கொண்டே இருங்கள்..



Click it and Unblock the Notifications
