Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
தம்பதிகளே! சலிப்பான உங்க உடலுறவை மசாலாவாக்க 'இத' மட்டும் நீங்க செஞ்சா போதுமாம் தெரியுமா?
சில தம்பதிகள் போர்ஃபிளேவில் ஈடுபடாமல்,நேரடியாக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்ற விரும்பினால், போர்ஃபிளேவில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்.
பெரும்பலான தம்பதிகள் திருமணமான சில காலங்களிலேயே உடலுறவில் விருப்பத்தை இழக்கிறார்கள், சலிப்பான பாலியல் வாழ்க்கையை பெறுகிறார்கள். இதற்கு, உடலுறவின்போது போர்ஃபிளேவில் ஈடுபடாமல் இருப்பதும் ஓர் முக்கிய காரணம்.

ஒவ்வொரு முறையும் நேரடி உடலுறவில் ஈடுபடுவது உங்களை வெறுப்படையச்செய்யலாம். ஆனால், நீங்கள் அதை அடிக்கடி ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். இருப்பினும், முத்தங்கள் மற்றும் அரவணைப்புகள் உடலுறவின் திருப்திகரமான இறுதிச் செயலுக்கு சரியான தொடக்கமாக அமைகின்றன. முன்விளையாட்டு இல்லாமை இருந்தால், பாலியல் தூண்டுதலின் பற்றாக்குறை இருக்கும்.
இது பெண்களுக்கு உயவு குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இறுதியில் உடலுறவை மகிழ்ச்சிக்கு பதிலாக வேதனையானதாக மாற்றலாம். போர்ஃபிளே மற்றும் ஆரோக்கியமான உடலுறவு வாழ்க்கைக்கான அதன் நன்மைகள் பற்றியும், அதை எப்படி சுவாரஸ்யமானதாக மாற்றலாம் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
முன்விளையாட்டு என்றால் என்ன?
உடலுறவுக்கு முன்பு தம்பதிகளுக்கு இடையே உள்ள நெருக்கமான மற்றும் விளையாட்டுத்தனமான செயல் முன்விளையாட்டாகும். இது போர்ஃபிளே என்று அழைக்கப்படுகிறது. மெதுவான மற்றும் அன்பான இந்த பாலுறவுச் செயல், உங்கள் பாலியல் ஆசையைத் தூண்ட உதவும் மற்றும் பாலியல் செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்கவும் உதவும்.
போர்ஃபிளேவின் பலன்கள்
பலர் உடலுறவை ஒரு நல்ல வொர்க்அவுட்டாக பார்க்கிறார்கள். ஏனெனில் இது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. மேலும் பலர் அதை இனப்பெருக்கம் செய்வதற்கான ஒரு செயலாக கருதுகின்றனர். ஆனால் அது அதை விட அதிகம். உடலுறவு கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். ஆனால் முன்விளையாட்டிற்கும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.
மனநிலையை அமைக்கிறது
தம்பதிகளுக்கு இடையே உள்ள தொடுதல் மற்றும் மேக்கிங் அனைத்தும் சரியான சூழலை உருவாக்குகிறது. நல்ல மனநிலையை இருவருக்கும் அமைத்து கொடுக்கிறது. போர்ஃபிளே தம்பதிகள் இருவருக்கும் ஒரு சிறந்த பாலியல் திருப்தியைப் பெற உதவுகிறது.
உணர்ச்சிபூர்வமான தொடர்பை உருவாக்குகிறது
நீங்கள் முன்விளையாட்டில் ஈடுபட்டால், அது உங்கள் துணையுடன் ஆழமான உணர்ச்சித் தொடர்பை உருவாக்க உதவும். எனவே, இது ஒரு உடல் மட்டத்தில் இணைப்பது மட்டுமல்ல, உங்களை உணர்வு ரீதியாகவும் இணைக்க உதவும்.
உடலுறவை இன்பமாக்குகிறது
நீங்கள் முன்விளையாட்டில் ஈடுபட்டால், உங்கள் துணையுடன் உடலுறவின் முழு செயல்முறையும் மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இது பாலியல் தூண்டுதலை உருவாக்குகிறது மற்றும் பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
உடலுறவு உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் துணையை முன்விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பது மட்டுமே. ஏனென்றால், இது நல்ல உணர்வு ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது. அதனால், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
செக்ஸ் வாழ்க்கையை மசாலாப் படுத்துவதற்கான குறிப்புகள்
பெரும்பாலான தம்பதிகள் போர்ஃபிளே பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. உண்மையான பாலியல் செயலைச் சுற்றியுள்ள தடை மற்றும் கூச்சத்தை தம்பதிகள் இருவரும் கடக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் தூண்டுதலில் உள்ள வேறுபாடு பற்றிய புரிதலின்மை ஆகியவை முன்விளையாட்டு பற்றி பேசுவதைத் தவிர்ப்பதற்கான அடிப்படைக் காரணம்.
மேலும், உடலுறவைப் பற்றி தங்கள் துணையிடமிருந்து எதிர்மறையான பதிலை எதிர்பார்ப்பது பற்றிய குற்ற உணர்வுகள் காரணமாக மக்கள் அதைப் பற்றி குறைவாகப் பேசுகிறார்கள். உங்கள் துணையிடம் உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்க வேண்டும்.
போர்ஃபிளேவில் கவனம் செலுத்துவது மற்றும் உங்கள் கூட்டாளியின் உணர்வுகளை அங்கீகரிப்பது ஆகிவை முக்கியம். முன்விளையாட்டை மிகவும் பொறுமையுடன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் நீங்கள் மென்மையாகவும் அன்பாகவும் உரையாடலை தொடங்கலாம். நீங்களே அல்லது உங்கள் துணையுடன் சேர்ந்து ஒன்றாக குளிப்பது சரியான தொடக்கமாக இருக்கும்.
குறைந்த ஒளி அல்லது மெழுகுவர்த்தி வெளிச்சம், இனிமையான நறுமணம் மற்றும் உடல் வாசனை திரவியம் போன்றவை உங்கள் துணையை ஈர்க்க உதவும். உங்கள் பங்குதாரர் உங்கள் உதடுகள், கழுத்து மற்றும் மார்பில் ஒரு மென்மையான முத்தம் கொடுக்கலாம். தொடுதல் மற்றும் சுவாசத்தின் வெப்பம் உங்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தரும்.
நீங்கள் விரும்பினால், ஸ்பாவுக்குச் செல்வதற்குப் பதிலாக, உங்கள் துணையிடம் ஆயில் மசாஜ் செய்யச் சொல்லலாம். தம்பதிகள் இருவரும் தங்கள் துணைக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
