Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்கள் முன்னாள் காதலி உங்களை மீண்டும் தேடி வந்து காதலிக்க இந்த தந்திரங்களை சரியாக செய்தால் போதும்...!
அனைவருமே வாழ்க்கையின் ஒரு தங்கள் முன்னாள் காதலன்/காதலியை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுவார்கள். காதல் முறிவு என்பது வலி, சோகம், கண்ணீர் மற்றும் காயம் என்று பல துன்பங்களை ஏற்படுத்தும்.
அனைவருமே வாழ்க்கையின் ஒரு தங்கள் முன்னாள் காதலன்/காதலியை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுவார்கள். காதல் முறிவு என்பது வலி, சோகம், கண்ணீர் மற்றும் காயம் என்று பல துன்பங்களை ஏற்படுத்தும். சிலருக்கு, தங்கள் துணையுடன் செலவழித்த மகிழ்ச்சியான நினைவுகளை மறப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கும்.

இந்த சூழ்நிலையால் இவர்கள் தங்கள் முன்னாள் காதலர்/காதலியை தங்கள் வாழ்க்கையில் திரும்பப் பெற தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பார்கள். எனினும், இது உண்மையில் எளிதான பணி அல்ல. முறிவுகள் பொதுவாக நிரந்தரமானவை, ஆனால் நீங்கள் உங்கள் முன்னாள் காதலரை என்றென்றும் விரும்புவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த எளிய குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

சோஷியல் மீடியாவை சரியாக பயன்படுத்தவும்
உங்கள் எக்ஸ் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்பதைக் காண்பிப்பதே இந்த தந்திரம். உங்கள் மகிழ்ச்சியின் படங்களை வெளியிடத் தொடங்குங்கள், அதாவது நண்பர்கள், குடும்பங்கள், வேலை அல்லது படிப்பு தொடர்பான படங்களை பதிவிடுங்கள். நீங்கள் இப்போது உங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை இது முன்னிறுத்துகிறது, இதைச் செய்வதன் மூலம், உங்கள் எக்ஸ் உங்கள் பிஸியான வாழ்க்கையின் ஒரு பகுதியாக மீண்டும் இருக்க விரும்பவாய்ப்புள்ளது. அவர்களின் பொறாமை வெளிப்படும், மேலும் அவர்கள் உங்களை விட்டு பிரிந்ததற்கு வருத்தப்படலாம்.

ரிவர்ஸ் சைக்காலஜியை உபயோகிக்கவும்
உங்கள் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு புதிய படத்தை பதிவேற்றம் செய்தால், மெச்சூரிட்டி கொண்ட நபராக இருங்கள் மற்றும் அதை கவனிக்காமல் விடுங்கள். உங்களைப் பொறாமைப்படச் செய்வதற்காக அல்லது அது இல்லாவிட்டாலும் கூட, உங்களிடமிருந்து ஒரு எதிர்வினையை அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். எனவே, அவர்கள் எதிர்பார்த்ததை அவர்கள் பெறாதபோது, அது உங்கள் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்.

உங்கள் தோற்றத்தை மேம்படுத்தவும்
பிரிந்த பிறகு உங்களின் சிறந்த தோற்றத்தால் உங்கள் எக்ஸ் பொறாமை கொள்ளும்படி செய்யவும். ஜிம்மிற்குச் செல்லுங்கள், மேக்கப் போடத் தொடங்குங்கள் அல்லது வெறுமனே பளபளக்கவும், ஏனென்றால் அது உங்கள் எக்ஸ் கண்ணைக் கவரும். உங்கள் மீது நேரத்தையும் கவனத்தையும் செலவிடுவது மிகவும் எளிதானது அல்ல, ஆனால் அது உங்களுக்கு வெகுமதி அளிக்கும், குறிப்பாக நீங்கள் உங்கள் முன்னாள் காதலர்/காதலியை மீண்டும் அடைய நினைத்தால் இது சிறப்பான பலனைத் தரும்.

அவர்களைத் தவிருங்கள்
உங்கள் நண்பரின் விருந்தில் அவர்களை சந்திக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள் அல்லது பார்க்க நேர்ந்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். குறைந்தபட்சம் ஒரு மாதமாவது உங்கள் முன்னாள் காதலருடனான எந்த தொடர்பையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். உறவிலிருந்து நீங்கள் இருவரும் உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதை பகுப்பாய்வு செய்ய இது மிகவும் தேவையான நேரத்தை உங்களுக்கு வழங்கும். இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல ஆனால் உங்கள் எக்ஸ் உங்களை மிஸ் செய்ய வைக்க இந்த நேரம் போதுமானதாக இருக்கும்.

மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள்
உங்கள் எக்ஸ் கவனிக்கும் மிக முக்கியமான விஷயம் உங்கள் புதிய மகிழ்ச்சி. நீங்கள் அவர்களை பைத்தியம் போல் மிஸ் செய்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம். உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், அந்த பிரகாசம் உங்கள் முன்னாள் நபரை முட்டாளாக்கட்டும், அவர்கள் இனி தேவையில்லை என்று நினைக்கிறார்கள். நீங்கள் வலுவாகவும், சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது, மக்கள் உங்களைச் சுற்றி கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள், அதே ஆர்வம் உங்கள் எக்ஸ்-க்கும் தோன்றும்.



Click it and Unblock the Notifications