For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க லவ்வரை பாராட்டலைன்னா என்ன நடக்கும் தெரியுமா?

உங்களோடு இருக்கும் அல்லது பயணிக்கும் நபரை நீங்கள் பாராட்டவில்லை என்றால் என்ன நிகழும் என்று தெரிந்து கொள்ளுங்கள்,

|

தெரிந்தோ தெரியாமலோ நம்மை வழிநடத்தும் சாவியை இன்னொருவரிடம் கொடுத்திருப்போம். இதனால் பல இன்னல்களை சந்தித்தாலும் மீண்டும் அப்படியான சுழலில் சிக்கியிருப்பதை தான் பெரும்பாலும் விரும்புவார்கள்.

எல்லாருக்கும் ஒரு கமிட்மென்ட் தேவைப்படுகிறது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் இந்த உலகத்தில் நீங்கள் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தான் உங்களிடமும் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் :

காதல் :

காதலோ நட்போ எந்த உறவாக இருந்தாலும் பாராட்டுதல் என்பது அவசியம், அவர்களது சொல்லை, செயல்களை விமர்சனம் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். அது நிறைவேறாத போது பின் விளைவுகளை சந்திக்க நேரும்.

காதலிலும் இதே நிலை தான். இணை செய்யும் செயல்கள் குறித்து உங்களுக்கு விமர்சனம் இருக்க வேண்டும். அவர்களை நீங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்த வேண்டும்.

நீங்கள் உங்கள் இணையை விமர்சிக்காவிட்டால் அவர்களுக்கான உங்கள் கருத்தை சொல்லாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

சலிப்பு :

சலிப்பு :

ஒருவர் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கான சன்மானம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றால் இருக்கும் உறவில் சலிப்பு தோன்றிடும். அதற்கு பிறகு ஒவ்வொரு நாளும் காதலில் கடினமானதாக மாறிடும்.

நம்பிக்கை :

நம்பிக்கை :

பாராட்டதக்க நல்ல செயல்கள் செய்திருந்தாலும் யாருமே பாராட்டாத போது அதுவும் காதலில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளாத போது காதல் மீது நம்பிக்கையை இழப்பார்கள். அதை விட, இது சரியாகத்தான் செய்கிறேனா? அல்லது தவறு செய்துவிட்டேனா என்று குழப்பிக் கொண்டிருப்பர்.

பாராட்டு :

பாராட்டு :

உங்களுடைய இடம் அவருக்கு அவ்வளவு முக்கியமானது என்று உணருங்கள். அது பசுமையான நினைவாக, அவர்களை ஊக்கப்படுத்தும் உந்துசக்தியாக நிற்கும்.

சில காலங்கள் கழித்து உங்கள் காதலை நினைக்கும் போது ஒருவரை ஒருவர் பாராட்டியது, விட்டுக் கொடுத்தது, தட்டிக் கொடுத்தது பற்றிய பேச்சுக்கள் உங்களை மகிழ்விக்கும்.

தேவையில்லை :

தேவையில்லை :

காதலில் மிகச்சிக்கலான உணர்வு இது. நான் செய்யும் எந்த விஷயத்திற்கும் இணை பாராட்டவில்லையே என்கிற ஏக்கம் தான் எதற்குமே பிரயோஜனமில்லை என்று நினைக்குமளவிற்கு ஆகிடும்.

பாதுகாப்பின்மை :

பாதுகாப்பின்மை :

சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற பயம் இருக்கும், எடுத்த முடிவு சரிதான என்பதில் குழப்பங்கள் இருக்கும், இதனால் அவர்கள் பாதுகாப்பு இல்லாதது போலவே உணர்வார்கள்.

உற்சாகப்படுத்தக்கூடிய பாராட்டுக்கள் எதுவும் கிடைக்காத போது அது அவர்களின் அச்ச உணர்வை இன்னும் அதிகமாக்கும்.

குணங்களில் மாற்றம் :

குணங்களில் மாற்றம் :

பாராட்டுக்காக ஏங்குபவர்கள் அது கிடைக்கவில்லையெனில் அது அந்த நபரின் குணங்களை மாற்றிடும் வாய்ப்புகள் அதிகம் . எதிலும் ஆர்வம் காட்டாமல் தங்களை தனிமை படுத்திக் கொள்வர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things happen when your lover doesn't appreciate you

Things happen when your lover doesn't appreciate you
Story first published: Wednesday, August 30, 2017, 16:40 [IST]
Desktop Bottom Promotion