For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கையை அடைய நினைத்த அண்ணன் செய்த தவறு... - My Story #092

தங்கை குளிப்பதை கண்ட அண்ணன், தற்கொலைக்கு முயற்சித்த தங்கை - My Story #092

|

ஆசை வேறு, இச்சை வேறு. இந்த இரண்டையும் நாம் பிரித்து புரிந்துக் கொள்ள தான் பருவ வயதில் படிப்பு மிகவும் அவசியம். ஆனால், படிக்கும் வயதில் மனம் திசை மாறிவிட்டால். நமது வாழ்க்கை பயணமும் திசை மாறிவிடும்.

இந்த திசை மாறிய பயணத்தில் இருந்து எளிதாக திரும்பி வர எந்த கூகிள் மேப்பும் இல்லை. எனவே, என் வாழ்க்கையை படித்து புரிந்துக் கொள்ளுங்கள். இது யாரும் முயற்சி செய்துவிடக் கூடாத பாடம்.

நான் 26 வயது ஆண். நான் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளவிருக்கும் சம்பவம் நடந்த போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் குற்றம் செய்தவன் என்பவதை நன்கு அறிவேன். அந்த குற்றவுணர்ச்சி என்னை தினம், தினம் கொன்றுக் கொண்டே இருக்கிறது.

எனது அசிங்கமான செயல்களை அறிந்துக் கொள்வதால், என் தங்கையை போன்ற மற்றவர்கள் காப்பாற்றப் படலாம் என்ற ஒரே காரணத்திற்காக தான், நான் இன்று இதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்ன்!

பார்ன்!

பருவ வயதில் எல்லா ஆண்களுக்கும் என்னென்ன ஆசைகள் துளிர் விடுமோ அந்த எல்லா ஆசைகளும் எனக்குள்ளும் துளிர்விட்டன, கொஞ்சம் அதிகமாகவே. பார்ன் வீடியோக்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். என் நண்பர்களுடன் மிகவும் அசிங்கமாக பலவற்றை பகிர்ந்துள்ளேன். என் நட்பு கூட்டத்தில் நாங்கள் தனியாக பேசும்போதெல்லம் அதில் பெரும் பங்கு பார்னை பற்றி தான் இருக்கும்.

தாக்கம்!

தாக்கம்!

அதிகமாக பார்ன் பார்க்கும் தாக்கம் என்னை பெரிதாக பாதித்தது. அப்போது எனது உறவுக்கார தங்கை என் வீட்டில் தங்க வந்திருந்தாள். ஓர் தங்கையை எப்படி எல்லாம் கற்பனை செய்யக் கூடாதோ, எப்படி எல்லாம் பார்க்க கூடாதோ அப்படி எல்லாம் கண்டவன் நான்.

சில நாட்கள்...

சில நாட்கள்...

அவள் எங்கள் வீட்டில் வந்து தங்கி ஓரிரு வாரங்கள் சென்றிருக்கும். அவள் வீட்டு வேலைகள் செய்துக் கொண்டிருக்கும் போது அவள் மீது ஆவல் கொண்டிருந்தேன். இது தவறு, இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவது தவறு என மனம் கூறினாலும், அதை கட்டுப்படுத்தும் அளவில் எனது உடல் இல்லை. எனது இச்சை எண்ணங்கள் அவளை அடைய வேண்டும் என என்னை தூண்டியது.

அவளது பலவீனம்!

அவளது பலவீனம்!

என் உறவுக்கார தங்கைக்கு ஒரு பலவீனம் இருந்தது. அவள் படுத்தவுடன் சீக்கிரம் உறங்கிவிடுவாள். அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். அவளுக்கே தெரியாமல், அவளை பல வேளைகளில் தீண்டியுள்ளேன். எனது சின்ன, சின்ன தவறுகளை அவளது தூக்கம் கண்டுபிடிக்கவில்லை என்பதால், என்னுள் தைரியம் அதிகரித்தது.

அம்மாவிடம் அடி!

அம்மாவிடம் அடி!

என் தைரியம் அதிகரிக்க துவங்கியதால்... எனது செயல்களும் அபாயகரமானதாக மாறியது. அவள் குளிப்பதை காண முயன்றேன். ஒரு நாள் எனது செயலை கண்டுபிடித்து, கத்திக் கூச்சலிட்டு என் அம்மாவிடம் கூறிவிட்டாள். அம்மாவிடம் வாழ்நாளில் வாங்காத அடியை, ஒரே நாளில் மொத்தமாக வாங்கினேன்.

இதயம் உடைந்தது!

இதயம் உடைந்தது!

அவள் இதயம் உடைந்து காணப்பட்டாள். இனிமேல் தங்கை என அழைக்கும் எந்த ஆணையும் அவள் சந்தேகிக்க நான் காரணமானேன். அவளிடம் என்னை மன்னித்துவிடு என கெஞ்சினேன். ஆனால், அவள் அதற்கு முன்வரவில்லை. நான் எண்ணியதை விட, கற்பனையும் செய்திடாத முடிவை எடுக்க அவள் சென்றாள்.

தற்கொலை!

தற்கொலை!

எனது இச்சை எண்ணத்தால் அவமானத்தில் கூனிக்குறுகி நின்ற எனது தங்கை... தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தாள். நாங்கள் அவளை தடுத்து காப்பாற்றிவிட்டோம். அம்மா என்னை மிகவும் திட்டினாள். அந்த திட்டோ, அடியோ என்னை பாதித்ததைவிட, தங்கையின் தற்கொலை முயற்சி என்னை பெருமளவு பாதித்தது.

நரகம்!

நரகம்!

இதற்கெல்லாம் மேல்... எனது வாழ்க்கை நரகமாக மாற துவங்கியது. நான் எனது மதிப்பையும், மரியாதையும் இழந்தேன். என்னை நம்ப யாரும் இல்லை. என் குடும்பத்தில் என் மீது அன்பு செலுத்த யாரும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்விலும் புறக்கணிக்கப்பட்டேன். என் தங்கை என்னை ஒரு பொறுக்கியை போல காண துவங்கினாள். என் அம்மா என்னை ஒரு அவமானத்தின் சின்னமாக பார்த்தாள்.

தனிமை!

தனிமை!

தவறு என்னுடையது. நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் ஏதும் இருக்கிறதா? என்றால்... இருந்தது. அவர்கள் என்னை முழுவதுமாக ஒதுக்கும் முன்னர். நானாக அவர்களிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தேன். இது என்னை மன அழுத்தத்தில் மூழ்கடித்தது. தருணம் கிடைக்கும் போதெல்லாம் என்னை என் அம்மா கொச்சையாக திட்டுவார். உண்மை தான் நான் கொச்சையானவன் தானே.

கண்காணிப்பு!

கண்காணிப்பு!

நான் எனது நண்பர்களுக்கு என்ன செய்தி அனுப்புகிறேன், நான் மொபைலில் படம் பார்க்கிறேனா? வேறு ஏதேனும் வீடியோ பார்க்கிறேனா என எனது குடும்பமே என்னை கண்காணிக்க துவங்கியது. என் தங்கை எடுத்த முடிவை, உண்மையில் நான் தானே எடுத்திருக்க வேண்டும். ஆம்! நானே தற்கொலை செய்துக் கொள்ளலாம் என யோசித்தேன். எனக்கு இருந்த ஒரே சுலபமான ஆப்ஷன் அதுதான்.

நான் மோசமானவன் அல்ல...

நான் மோசமானவன் அல்ல...

நான் செய்த தவறுக்கு மனிப்பு கிடையாது தான். ஆனால், அதற்காக நான் பொம்பளை பொறுக்கி என்ற பிம்பம் விழும் அளவிற்கு மோசமானவன் அல்ல. என்னை அனைவரும் ஒரு செக்ஸ் அடிக்ட் கொண்டவன் என்பது போல காண துவங்கியது என்னை ஒவ்வொரு நொடியும் கொன்றுக் கொண்டிருந்தது.

நான் ஒரு தவறு செய்தேன். ஆம்! அதை நானே ஒப்புக் கொள்கிறேன். ஆனால், என் குடும்பம் என்னும் அளவிற்கு நான் மோசமானவனும் அல்ல.

எண்ணம் மாற வேண்டும்!

எண்ணம் மாற வேண்டும்!

என் மீது என் குடும்பம் கொண்டிருக்கும் எண்ணத்தை, பிம்பத்தை நான் மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் எனது அம்மா மற்றும் தங்கையின் பார்வையிலாவது நான் நல்லவனாக தெரிய வேண்டும். நான் தற்கொலை செய்துக் கொண்டாலும் கூட என் மீது படிந்துள்ள குற்றக்கறை என்னை விட்டு நீங்காது. அதற்கு ஒரே வழி... என்னை அவர்கள் நம்பும்படி ஏதேனும் செய்துக் காட்ட வேண்டும். அதனால், தற்கொலை சரியான தீர்வல்ல என அறிந்தேன்.

சகோதர, சகோதரிகளே!

சகோதர, சகோதரிகளே!

நான் இங்கே எனது வாழ்வில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள இது தான் காரணம். நாம் செய்த ஒரே ஒரு தவறு கூட நமக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என்பதற்கு நான் ஓர் எடுத்துக் காட்டு. நான் செய்த ஒரே ஒரு தவறு எனது சொந்த குடும்பத்திலேயே நான் மூன்றாம் நபராக வாழ்ந்து வர காரணமாக அமைந்துவிட்டது.

பருவ வயதில் ஹார்மோன்கள் காரணமாக இது போன்ற எண்ணங்கள் வரும். ஆனால், அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள நாம் வலிமையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை!

வாழ்க்கை!

நம்மை ஊரில் யார் வேண்டுமானாலும் நம்பாமல் இருக்கலாம். ஆனால், சொந்த வீட்டில் அம்மாவும், தங்கையுமே நம்பாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என் தங்கை போல ஊரில் இன்னும் எத்தனையோ தங்கைகள் தனது சொந்த உறவுகளாலே பாதிக்கப்பட்டிருக்கலாம்.

என்னுள் இருக்கும் வலியை காட்டிலும், பெரிய வலி என் தன்கைக்குள் இருப்பது தான். இதற்கான ஒரே தீர்வு.தயவு செய்து உங்கள் மனதை கட்டுப்படுத்துங்கள். உறவுகள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க்கையை இழந்துவிட்டு தெருவில் வெறும் பிணமாய் வாழ்வது வாழ்க்கை அல்ல.

நம்பிக்கை!

நம்பிக்கை!

ஒரு நாள் செய்த தவறு... ஆனால், இன்று வரை... என் தங்கை மற்றும் அம்மாவின் பார்வையில் ஓர் நல்லவனாக, அவர்கள் நம்பும் படியானவனாக தோன்ற அனுதினம் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பொருளை அழிப்பது சுலபம் உருவாக்குவது கடினம் என்பார்கள். அதே போல தான் நம்பிக்கையும். நம்மீதான நம்பிக்கையை நாம் மிக சுலபமாக இழந்துவிட கூடும். ஆனால், அதை மீண்டும் பெறுவது மிகவும் கடினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: My Sister Was Molested and Im The Culprit!

My Story: My Sister Was Molested and Im The Culprit!
Desktop Bottom Promotion