Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காதல் பூக்கும் இடம் மூளைதானாம்! உங்களுக்குத் தெரியுமா?
"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை"... என்று பெண்களும்,
"மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே..." என்று ஆண்களும் காதல் பிறந்த நொடி முதல் மந்திரித்து விட்ட கோழி மாதிரி சுற்றிகொண்டிருப்பார்கள். அவர்களின் இந்த நிலைக்கு என்ன காரணம் தெரியுமா? முளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்தானாம்.
காதல் தோன்றும் இடம் இதயம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுதான் இல்லை எல்லாம் மூளையிலிருந்து வரும் சமிக்சை என்கின்றனர் நிபுணர்கள்.

ரொமான்ஸ் உணர்வுகள்
நம்முடைய ரொமான்ஸ் உணர்வுகளை நிர்ணயிப்பது நமது மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியாம். அயர்லாந்து விஞ்ஞானிகள் இதை ஆய்வின் மூலம் கண்டறிந்து சொல்லியுள்ளனர்.
அதாவது மீடியல் ப்ரீபிரன்டல் கார்டெக்ஸ் என்ற மூளையின் ஒரு பகுதிதான் ரொமான்டிக்கான விஷயங்களை நிர்ணயிக்கும், தீர்மானிக்கும் பகுதியாக இருக்கிறதாம். இது மூளையின் முன் பகுதியில் உள்ளது.
மின்னல் வேகத்தில் முடிவுகளை எடுக்கும் திறமை இந்த ஏரியாவுக்கு இருக்கிறதாம். இதுதான் ஒருவரை நமக்குப் பிடித்திருக்கிறது என்று நமது மனதுக்கு கட்டளை அனுப்புகிறதாம்.

என் உயிர் நீதானே!
ஒரு பெண்ணை பார்த்த உடன் சட்டென்று மின்னல் தோன்றுமே.... மனசுக்குள் மணியடிக்குமே... அதேபோல் பெண்ணுக்கும் ஆணை பார்த்த உடன் இவன்தான் எனக்கானவன் என்று உணர்த்துமாம். இதனை செய்வது கூட இந்த மீடியல் ப்ரீபிரன்டல் கார்டெக்ஸ்தானாம். ரியல்வேர்ல்ட் டேட்டாவைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தி முடிவை தெரிவித்துள்ளர்.

மூளையின் தகவல்கள்
இந்த ஆய்விற்காக 78 ஆண்களையும், 73 பெண்களையும் தேர்ந்தெடுத்து உட்படுத்தியுள்ளனர். இவர்களில் தனியாக இருப்போர் மற்றும் ஆண், பெண் உறவில் ஈடுபடுவோர் என சகலரும் அடக்கம். இவர்களை ஜோடி ஜோடியாக ஒரு அறைக்குள் தனியாக அனுப்பி ஐந்து நிமிடம் பேச வைத்துள்ளனர். அப்போது அவர்களின் மூளையின் மீடியல் ப்ரீபிரன்டல் கார்டெக்ஸ் பகுதியை ஆய்வு செய்து புள்ளிவிவரத்தை சேகரித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஜோடியையும் மாற்றி மாறி பேச வைத்து தகவல் சேகரித்துள்ளனர்.

மூளையின் மேப்
இவர்களில் யாரை மீண்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற தகவலையும் தனித் தனியாக ஒரு விண்ணப்பத்தில் எழுதியும் வாங்கி அதையும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த டேட்டிங் ஆய்வுக்கு முன்னதாக இந்த பங்கேற்பாளர்களில் 39 பேரின் மூளைகளை மேப் செய்துள்ளனர். அதாவது எப்எம்ஆர்ஐ மூலம் இந்த மேப்பிங்கை செய்துள்ளனர்.

மின்னல் வேக முடிவு
இந்த ஆய்வின்போது கிடைத்த தகவல்கள் படு சுவாரஸ்யமாக இருந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மூளையும் தான் சந்தித்த ஆண் அல்லது பெண் குறித்த முடிவுகளை மின்னல் வேகத்தில் கணித்து எடுத்ததாம். அதாவது இவன் இன்டரஸ்டிங்கா பேசுகிறான், இவனது பேச்சு படு சொதப்பல், இவன் செம மொக்கை, இவன் சூப்பர்ப்பா என்ற முடிவுகளை மூளை எடுத்ததாம்.

மூளையின் சுறுசுறுப்பு
ஆய்வில் கிடைத்த இன்னொரு தகவல் என்னவென்றால், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதுதான் இந்த கார்டெக்ஸ் பகுதி படு சுறுசுறுப்பாக செயல்படுகிறதாம். மற்ற நேரத்தில் அவ்வளவு துரிதமான செயல்பாடு இங்கு இல்லையாம். மேலும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு முகத்தைப் பார்த்ததும் இந்த கார்டெக்ஸ் பகுதியின் செயல்பாடு மேலும் ஆக்டிவாக இருக்கிறதாம்.

இனி காதலின் சின்னம் மூளை
இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், காதல் விசயத்தில் இதயத்தை விட மூளைதான் அதிகம் செயல்படுகிறது. எனவே காதலனுக்கோ, காதலிக்கோ ஆர்ட்டின் வரைந்து அம்பு விடுவதற்கு பதிலாக இனி மூளையை வரைந்து அனுப்புங்க...அதுதானே உங்களவரை உங்களுக்குக் காட்டிக் கொடுத்து, காதல் மலர உதவியது...



Click it and Unblock the Notifications