Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வெள்ளை குருமா
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு வெள்ளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* காய்கறிகள் - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4-5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4-5
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெள்ளை குருமா தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
