Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
கோதுமை தோசையை ஒருவாட்டி இந்த மாதிரி சுடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்ய சொல்வாங்க...
Wheat Vegetable Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுடலாம். இந்த கோதுமை தோசை மிகவும் ஆரோக்கியமானது.
ஏனெனில் இந்த தோசை மாவுடன் உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் போன்ற காய்கறிகள் சேர்க்கப்படுகிறது. உங்கள் வீட்டில் கோதுமை தோசை சாப்பிட மறுப்பவர்களுக்கு, இப்படி ஒருமுறை தோசை சுட்டு கொடுத்தால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். அதுவும் இந்த தோசைக்கு கார சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு வெஜிடேபிள் கோதுமை தோசை மற்றும் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் கோதுமை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் -1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
கார சட்னிக்கு...
* வரமிளகாய் - 10
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 8 பல்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு,
அதை துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1/4 கப் ரவை
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து, 25-30
நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் துருவிய கேரட் மற்றும்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து
விட வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ், 1 டீஸ்பூன் மிளகு, 1/2
டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவேண்டும். மாவானது கடினமாக
இருந்தால், அத்துடன் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, பேன் நன்கு சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை அள்ளி கல்லில் ஊற்றி, தேலே கிளறி, 10 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், சுவையான கோதுமை வெஜிடேபிள் தோசை தயார்.
* அதன் பின் இந்த தோசைக்கு சைடு டிஷ் செய்ய, மிக்சர் ஜாரில்
வரமிளகாய், வெங்காயம், உப்பு, புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்
தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications