Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
1 கப் கோதுமை ரவை இருந்தா.. உப்புமா செய்யாம.. ஒருடைம் இப்படி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்களேன்..
Wheat Rava Sponge Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு, தோசை சுட்டு சாப்பிடுங்கள். என்னது, கோதுமை ரவையில் தோசையா என்று நீங்கள் கேட்கலாம்.
இதுவரை நீங்கள் கோதுமை ரவை கொண்டு உப்புமா மட்டும் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு தோசை சுடும் போது, தோசை பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அத்துடன் இந்த தோசைக்கு கார சட்னி சரியான பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1 கப்
* அவல் - 1/4 கப்
* தயிர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
கார சட்னிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 10
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை
சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த கோதுமை ரவை குளிர்ந்த பின், அத்துடன் அவல் மற்றும்
தயிரை சேர்த்து, சிறிது நீரையும் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதற்குள் அதற்கான சட்னியை செய்யலாம்.
* அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ண்ய ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து, இஞ்சி, பூண்டு,
வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் உப்பையும் சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கியதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அத்துடன் அரைத்த சட்னியை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி,
சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், கார சட்னி
தயார்.
* பின்னர் ஊற வைத்த கோதுமை ரவையை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சோடா உப்பை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மாவை
தோசையாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான
கோதுமை ரவை தோசை தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications