Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
Wheat Idli Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் என்ன சமையல் செய்வதென்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் வேலையை குறைக்கவே ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒருசில ஐடியாக்களுடன், புதுபுது ரெசிபிக்களையும் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருப்பது, இட்லி மாவு இல்லாத சமயத்தில், கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடிய இட்லியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த கோதுமை இட்லி செய்வதற்கு சுலபமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். மேலும் இதை காலை உணவின் போதோ அல்லது இரவு உணவின் போதோ செய்யலாம். இந்த கோதுமை இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* அதிக புளிப்பில்லாத தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலி/தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் கோதுமை
மாவை சேர்த்து, மாவு லேசாக நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதை இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதிகம் வதக்காமல் ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கிக் குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவை எடுத்து, அதில் 1/2 டீஸ்பூன்
உப்பு, தயிர் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு
பதத்திற்கு கட்டிகளின்றி, கையால் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் சிறிது சமையல் சோடாவையும் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் வதக்கி வைத்துள்ள பொருட்களையும் அதனுடன் சேர்த்து நன்கு
கிளறிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் லேசாக எண்ணெய் தடவி,
கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை இட்லி தயார்.
Image Courtesy: Cooking 4 all Seasons



Click it and Unblock the Notifications