Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த சூப்பை தினமும் காலையில் 1 கப் குடிங்க... உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும்...
Weight Loss Ragi Vegetable Soup Recipe In Tamil: நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்களின் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்படியானால் உணவில் முதலில் கவனம் செலுத்துங்கள். அதுவும் காலையில் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவு மிகவும் இன்றியமையாதது.
நீண்ட நேரம் கழித்து காலையில் உட்கொள்ளும் உணவு மிகவும் சத்தானதாக இருந்தால், அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும். இந்நிலையில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் சூப்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது சிறப்பான பலனைப் பெறக்கூடும். . அதுவும் ராகி வெஜிடேபிள் சூப்பை குடிக்கும் போது எடையில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, வேறு பல நன்மைகளையும் பெறலாம்.

ஏனெனில் இந்த சூப்பில் உள்ள ராகியில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இந்த ராகியை தினமும் மிதமான அளவில் உட்கொண்டு வந்தால், அது எடை இழப்புக்கு உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தும், இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவும் மற்றும் கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும்.
இப்போது ராகி வெஜிடேபிள் சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி வெஜிடேபிள் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* ராகி மாவு - 15 கிராம்
* தண்ணீர் - கரைப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும்
துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ்,
குடைமிளகாய் சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்கி வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் சூப்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் நன்கு கொதித்து, காய்கறிகள் வெந்ததும், அதில் ராகி மாவை நீரில்
கட்டிகளின்றி கரைத்து ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* ராகி மாவு நன்கு வெந்து, சூப் சற்று கெட்டியாகத் தொடங்கியதும்,
அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான ராகி வெஜிடேபிள் சூப் தயார்.



Click it and Unblock the Notifications