Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த சூப்பை அடிக்கடி செஞ்சு குடிங்க.. உடம்பில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை சீக்கிரம் குறையும்..
Weight Loss Barley Vegetable Soup Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டிலும் இருக்கிறீர்களா? அப்படியானால் அந்த டயட்டில் உடல் எடையை மேலும் குறைக்கத் தூண்டும் ஒரு சூப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது தான் பார்லி வெஜிடேபிள் சூப். இந்த சூப்பில் உள்ள பார்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் பார்லியை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதோடு இந்த சூப்பில் காய்கறிகளும் சேர்ப்பதால், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். இதுவரை நீங்கள் பார்லியைக் கொண்டு கஞ்சி மட்டும் தான் செய்து சுவைத்திருந்தால், அடுத்தமுறை சூப் செய்து குடியுங்கள். அதுவும் இந்த சூப்பை காலையில் தொடர்ந்து குடித்து வந்தால், எடையில் நல்ல மாற்றத்தை குறுகிய காலத்தில் காணலாம்.

உங்களுக்கு பார்லி வெஜிடேபிள் சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி வெஜிடேபிள் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி அரிசி - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
சூப்பிற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 1 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பார்லி அரிசியை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து, குக்கரில் பார்லி அரிசியை கழுவி சேர்த்து,
அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய்
சேர்த்து, சிறிது உப்பு தூவி 3-4 நிமிடம் காய்கறிகளை நன்கு வதக்கி வேக
வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள பார்லி அரிசியை
சேர்த்து கிளறி, மிளகுத் தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பார்லி வெஜிடேபிள் கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications