Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்...
Weight Loss Oats Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா? உடல் எடையைக் குறைப்பதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் அப்படியென்றால் நிச்சயம் ஓட்ஸ் இருக்கும். பொதுவாக ஓட்ஸை அவ்வளவு ருசியான உணவுப் பொருள் அல்ல. ஆனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவக்கூடியது. இப்படிப்பட்ட ஓட்ஸை நிறைய பேர் பிடிக்காமல் தான் சாப்பிடுவார்கள்.

ஆனால் ஓட்ஸையும் சுவையாக சமைத்து சாப்பிட முடியும். அதுவும் கஞ்சியாக தயாரித்து காலை வேளையில் குடித்து வரும் போது உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, இப்படி ஓட்ஸை கஞ்சியாக தயாரித்தால், எடைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
இந்த ஓட்ஸ் கஞ்சி குறித்து ப்ரக்மா கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ஓட்ஸ் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஓட்ஸ் - 1 கப்
* தண்ணீர் - 5 கப்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 5 கப் நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில்
வைத்து, ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.
* ஓட்ஸ் வெந்ததும், அதில் கொத்தமல்லி, புதினாவை சிறிது சேர்த்து
கிளறி, அத்துடன் மிளகுத் தூளையும் சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும்,
அதை இறக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1/4 கப் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறினால், சுவையான
ஓட்ஸ் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications