Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
1 கப் ஓட்ஸ் வெச்சு.. காலையில் 10 நிமிடத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதுடன்.. உடல் எடையும் குறையும்!
Weight Loss Oats Idli Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக ஓட்ஸை உணவில் அதிகம் சேர்ப்பீர்களா? எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த காலை உணவு. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், தினமும் காலையில் உட்கொண்டு வந்தால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.
பொதுவாக ஓட்ஸை பலரும் கஞ்சியாக சாப்பிடுவார்கள். ஆனால் ஓட்ஸை கஞ்சியாக செய்யும் போது, அது வழுவழுப்பாக இருக்கும். இதனால் சிலர் பிடிக்காமல் கஷ்டப்பட்டு சாப்பிடுவார்கள். ஆனால் இனிமேல் ஓட்ஸை கஞ்சியாக சாப்பிடாமல், இட்லி போன்று செய்து சாப்பிடுங்கள். இந்த ஓட்ஸ் இட்லி எடையைக் குறைப்பவர்களுக்கு மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.

உங்களுக்கு ஓட்ஸ் இட்லியை எப்படி 10 நிமிடத்தில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1 கப்
* ரவை - 1/2 கப்
* புளித்த தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை சேர்த்து 2
நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் ரவையை சேர்த்து
3 நிமிடம் வறுத்து இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அந்த ரவையுடன் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த ஓட்ஸை சேர்த்து ரவை பதத்திற்கு
கொரகொரவென்று அரைத்து, ரவையுடன் சேர்த்து, அத்துடன் 1 1/2 கப்
நீரையும் ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது முந்திரி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை
மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், தேங்காய் சேர்த்து,
சிறிது உப்பு தூவி, காய்கறிகளை ஓரளவு வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு ஊற வைத்த ஓட்ஸை எடுத்து, அதில் இட்லி மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, கிளறி, அத்துடன் வதக்கிய பொருட்களை சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் பேக்கிங் சோடா மற்றும் கொத்தமல்லியை தூவி நன்கு கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில் இந்த ஓட்ஸ் கலவையை இட்லிகளாக ஊற்றி, இட்லி
பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
மற்றும் பஞ்சு போன்ற ஓட்ஸ் இட்லி தயார்.



Click it and Unblock the Notifications









