Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த கஞ்சியை அடிக்கடி குடிங்க.. உடல் எடையும் குறையும்.. எலும்புகளும் வலுபெறும்..
Weight loss Ragi Kanji Recipe In Tamil: நீங்கள் அதிக உடல் எடையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அத்துடன் உங்களின் டயட்டிலும் ஒருசில உணவுகளை சேர்த்து வாருங்கள்.
அதுவும் காலை உணவின் போது கஞ்சிகளை எடுக்கும் போது, உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ராகியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான கால்சியத்தால் எலும்புகள் வலுவடைவதோடு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி புரிந்து, எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

உங்களுக்கு ராகி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* கெட்டி தயிர் - 3 கரண்டி
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் இரவு தூங்கும் முன் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை
எடுத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, கட்டிகளின்றி கரைத்து, இரவு
முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி ராகி மாவு நீரில் ஊறும் போது, மாவு புளித்து அதில் குடல்
ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் புரோபயோடிக்குகள்
அதிகரிக்கும்.
* மறுநாள் காலையில் ராகி மாவின் மேல் உள்ள நுரைப் போன்றதை
நீக்கிவிட்டு, பின் கரண்டியால் ராகி மாவை நன்கு கலந்து விட
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி,
பின் அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* ராகி மாவானது நன்கு கொதித்து மாவு நன்கு வெந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மாவு நன்கு குளிர்ந்த பின், அதில் 3 கரண்டி கெட்டி தயிரை
சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து விட
வேண்டும்.
* இறுதியாக தயாரித்த கஞ்சியை ஒரு டம்ளரில் அல்லது பௌலில் ஊற்றி, மேலே
சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி பரிமாறினால், சுவையான ராகி
கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications