Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. கெட்ட நீர், கெட்ட கொழுப்பு நீங்கி, உடல் எடை வேகமா குறையும்!
Weight Loss Kuthiraivali Arisi Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? அந்த உடல் எடையைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, டயட்டிலும் உள்ளீர்களா? அந்த டயட்டில் எப்போதும் சுவையில்லாத உணவுகள் தான் இருக்குமா?
அப்படியானால் சுவையான உணவுகளை உட்கொண்டே உடல் எடையைக் குறைக்கலாம். அதுவும் சிறுதானியங்களைக் கொண்டு அருமையான சுவையில் கஞ்சியை தயாரித்து குடித்து வந்தால், வாய்க்கும் ருசியாக இருக்கும், உடல் எடையும் வேகமாக குறையும்.

அதிலும் சிறுதானியங்களுள் ஒன்றான குதிரைவாலி அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து தினமும் காலையில் 1 கப் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். அதன் மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். முக்கியமாக குதிரைவாலி அரிசி கஞ்சி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளும் இந்த கஞ்சியைக் குடிக்கலாம்.
உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும் குதிரைவாலி அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குதிரைவாலி அரிசி - 150 கிராம்
* பூண்டு - 20 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 3/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குதிரைவாலி அரிசியை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள குதிரைவாலி அரிசியை சேர்த்து ஒருமுறை
வதக்கி, கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி
கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான
குதிரைவாலி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications